என்னை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு போட்டதா? - இயக்குநர் லிங்குசாமி கொடுத்த விளக்கம்
கைது தொடர்பான சர்ச்சைகளுக்கு இயக்குனர் லிங்குசாமி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் தன்னுடைய தம்பி சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு லிங்கு சாமியும் அவருடைய தம்பியும் தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்திற்காக Paceman Finance நிறுவனத்தின் இடமிருந்து 35 லட்சத்தை கடனாக வாங்கி இருந்தார்கள். இந்த கடனை வட்டியுடன் 48 லட்சம் திருப்பி செலுத்த வேண்டும் என்று Paceman Finance நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
லிங்குசாமி வழக்கு:
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று இருந்தது. பின் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கப்பட்டிருக்கிறது. அந்த தீர்ப்பில் லிங்குசாமி, அவர் தம்பி சுபாஷ் சந்திரபோஸ் இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அடுத்து லிங்குசாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது கோலிவுட்டில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=AggcF8Z6D0s
நீதிமன்றம் தீர்ப்பு:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் லிங்குசாமி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் Paceman Finance நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138 -ன் கீழ் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
— Lingusamy (@dirlingusamy) December 19, 2025
லிங்குசாமி பதிவு:
நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக்கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார்.