2 கோடி ரூபாய் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுக்க வேண்டும் - நீதிமன்றம் போட்ட உத்தரவு - என்ன ப்ரச்சனை?

By subhashini · 25/4/2025

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நீதிமன்றம் போட்டிருக்கும் அதிரடி உத்தரவு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை அமைத்து இருந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் கொடுத்த படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய எடுத்து தந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் மட்டும் இல்லாமல் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தில் வீர ராஜ வீர பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் தன்னுடைய தந்தை மற்றும் உறவினர் இசை அமைத்த சிவா ஸ்துதி பாடலின் காப்பி என்று ஃபயாஸ் வசிஃபுதின் டாகர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் மீது வழக்கு:

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர் ரகுமான் தரப்பில், சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு தான் வீர ராஜ வீர பாடலை உருவாக்கி இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி, இது வெறும் ஈர்ப்பு போல மட்டும் தெரியவில்லை. சிவா ஸ்துதி பாடல் சிறிய மாற்றங்களுடன் பயன்பட்டது போல் இருப்பதாக தெரிகிறது.

https://www.youtube.com/watch?v=03xHT_x_bO4

நீதிமன்றம் தீர்ப்பு:

இதனால் டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் 2 கோடி ரூபாய் ஏ.ஆர் ரகுமான் செலுத்த வேண்டும். மேலும், மனுதாரர் டாகருக்கும் 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் ஏ ஆர் ரகுமானுக்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் இசைப்பயணம்:

பின் இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார். தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார்.

ஏ.ஆர் ரகுமான் குறித்த தகவல்:

முதல் படத்திலேயே இவரின் பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full