சற்று முன் : பிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார்.! அதிர்ச்சியில் திரையுலகம்.!

By Rajkumar · 10/6/2019

தமிழில் பல்வேறு படத்தில் வசனகர்த்தாவாகவும், நடிகருமான பணியாற்றி கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேசி மோகன், தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். 

இவரது நாடகத்தின் மூலம் பல்வேறு கலைஞர்கள் சினிமாவிலும் கால்பதித்துள்ளனர். பிரபல காமெடி நடிகரான சதீசும் இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் தான். கிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால் இவர் உண்மையில் இரு கதையாசிரியர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்.

1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார். இந்த கதையை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசினை வழங்கினார். அன்றிலிருந்து கிரேசி மோகன் கதையாசியரியராக மாறிவிட்டார்.

அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு.

இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருக்கிறார். அர்ஜுனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹரிதா என்பவருடன் திருமணம் ஆனது. இந்த திருமணத்திற்கு பல திரை பிரபலங்கள் வந்ததிருந்தனர். இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் மாரடைப்பு காரணமாக கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ளது. கிரேசி மோகனின் இந்த மறைவு தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full