நேற்று டி20 கோப்பையை கைப்பற்றி இன்று நடிகையை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர். குவியும் வாழ்த்து.

By Rajkumar · 2/12/2019

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'உதயம் NH4' படத்தில் கதாநாயகியாக நடித்த அஷ்ரதா ஷெட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பண்டேவே திருமணம் செய்துள்ளார். தமிழில் "உதயம் NH4 ,ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித், போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இதைத்தொடர்ந்து ஒரு துளு படத்திலும் நடித்து உள்ளார். மேலும், இவர் நடித்து வரும் 'நான் தான் சிவா' படம் கூடிய விரைவில் வரப்போகிறது. இவரும் பெங்களூரை சார்ந்தவர் தான். மனிஷ் பாண்டே, அஷ்ரிதா ஷெட்டி இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாவே காதலித்து வருகிறார்கள்.

ஆனால், இவர்கள் காதல் குறித்து எந்த ஒரு தகவலும் சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ தெரிவிக்கவில்லை. ரகசியமாகவே பாதுகாத்து வந்தார்கள். 30 வயதே ஆன மனிஷ் பாண்டே இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி இருக்கிறார். பெங்களூரை சேர்ந்த இவர் இதுவரை இந்தியாவுக்காக 23 ஒருநாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனவர்.

இதையும் பாருங்க : நந்தினி சீரியல் நடிகை இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்தம் முடிந்தது. புகைப்படங்கள் இதோ.

தற்போது மனிஷ் பாண்டே கர்நாடக அணியில் முக்கிய வீரராகவும், முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவந்தார் . கிரிக்கெட் அணியில் நான்கு, ஐந்தாவது இடத்திற்கு தகுதியான நபராக இருப்பார் என களமிறங்கிய மனிஷ் பாண்டே தொடர்ந்து நடந்த கிரிக்கெட் தொடரில் சொதப்பி வந்ததால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார். மேலும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது டி-20 போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

நேற்று(டிசம்பர் 1) சூரத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் மணிஷ் பாண்டே தலைமையிலான கா்நாடக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி களைப்போடு திருமணத்தில் கலந்து கொண்டு நடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணமுடித்துள்ளார் மனிஷ் பாண்டே. பெற்றோர்களால் நிச்சயமிக்கப்ட்ட இந்த காதல் திருமணம் மிகவும் கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர்.

behindtalkies AMP · Quick view
View full