இத்தனை ஆண்டுகால உழைப்பு, புதிய சொகுசு காரை வாங்கிய சுனிதா - விலை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா ?

By subhashini · 13/7/2023

குக் வித் கோமாளி சுனிதா விலை உயர்ந்த சொகுசு கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது ஜொலித்து வருகிறார்கள்.

அந்த வகையில். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சுனிதா. இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் பின் இவர் ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.

சுனிதா திரைப்பயணம்:

பின் இவர் தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சுனிதா படங்கள் மற்றும் சீரியல்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதுவரை குக் வித் கோமாளி 3 சீசன்களை முடிவடைந்து இருக்கிறது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி ரேடிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Sunita Gogoi (@sunitagogoi_offl)

குக் வித் கோமாளி ன் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பட், மற்றும் தாமு இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக சுனிதா இருந்தார். சுனிதா வெளிமாநிலத்தவர் என்பதால் அவர் பேசும் தமிழ் மொழி தனி. இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது சுனிதாவிற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சுனிதா செய்யும் மொக்க காமெடிகளும், க்யூட்டா கொடுக்கும் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

சுனிதா நடிக்கும் படம்:

தற்போது இவர் சந்தோஷ் உடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். இதில் இவர் பதிவிடும் புகைப்படம், வீடியோ எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. அதோடு இவருக்கு 1.4 மில்லியன் பாளோவர்ஸ் இருக்கிறார்கள். மேலும், இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சுனிதா வாங்கிய புது கார்:

இந்த முறையும் சுனிதா நிகழ்ச்சியில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். இந்த நிலையில் சுனிதா புது கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் லக்சூரி ஹைபிரிட் என்ற காரைத் தான் வாங்கி இருக்கிறார். இதனுடைய விலை 60 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சுனிதா அவர்கள் தான் வாங்கிய புது கார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சுனிதாவிற்கு வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full