தமிழில் மீண்டும் சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் - குவியும் வாழ்த்துக்கள்
மீண்டும் தமிழ் சினிமாவில் சின்மயிக்கு பிரபல இசையமைப்பாளர் வாய்ப்பு கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் பாடகி மட்டும் இல்லாமல் டப்பிங் கலைஞரும் ஆவார். இது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
இதனால் சின்மயிக்கும், வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதை அடுத்து சின்மயிக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்தது. டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்று டப்பிங் பேசுவதற்கு சின்மயிக்கு தடை போட்டார்கள். அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் சின்மயி பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதெல்லாம் வைரமுத்து மீது புகார் சொன்னதினால் தான் நடந்தது என்று சின்மயி கூறியிருந்தார். அதற்குப் பின் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடங்கப்பட்டது.
சின்மயி விவகாரம்:
2018 ஆம் ஆண்டிற்கு பிறகு சின்மயி தமிழில் எந்த பாடலையும் பாடவில்லை. ஆனால், இவர் தமிழைத் தவிர மற்ற அனைத்து மொழிகளிலுமே கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து வெளியாகி இருக்கும் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் முத்த மழை என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது.
சின்மயிக்கு ஆதரவு:
இந்த பாடலை பாடகி தீ தான் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி தான் முத்த மழை பாடலை பாடி இருந்தார். இந்த பாடலை கேட்டு எல்லோரும், தீ பாடியது விட சின்மயி பாடிய வெர்சன் தான் அழகாய் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது என்று இருவரையும் ஒப்பிட்டு கமெண்ட்ஸ்களை போட்டு இருந்தார்கள். அதோடு இந்தக் குரலையாட இத்தனை வருடமாக பேன் செய்து வைத்திருந்தீர்கள்? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள்.
ரசிகர்கள் கோரிக்கை:
இதை அடுத்து சின்மயி, தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டதும் அவர் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து நிறைய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
அதனால் நாளுக்கு நாள் சின்மயிக்கு ஆதரவுகள் பெருகிக்கொண்டே வருகிறது. இதை அடுத்து சின்மயிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பேன் என்று சமீபத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழில் சின்மயிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்மயி கம்பேக்:
அதாவது, டி இமான் இசையில் தான் சின்மயி பாடியிருக்கிறார். கே.எஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தான் சின்மயிக்கு இசையமைப்பாளர் டி.இமான் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக ரெக்கார்டிங் தியேட்டரில் சின்மயி உடன் இருக்கும் புகைப்படத்தை டி.இமான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, என்றும் ஆன்மாவை தொடரும் சின்மயின் குரலில் மீண்டும் ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகிறேன். என் மனதிற்கு நெருக்கமான ஒரு மெல்லிசை பாடல் என்று கூறி இருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு சின்மயிக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. சின்மயி குரலை கேட்க பலருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.