திருமூர்த்தி, வைக்கோம் விஜயலக்ஷ்மியை தொடர்ந்து மீண்டும் ஓர் மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பு கொடுத்த இமான்.

By subhashini · 26/7/2023

மீண்டும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு இசையமைப்பாளர் டி. இமான் வாய்ப்பளித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். குறிப்பாக, அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் மீண்டும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பளித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

டி.இமான் இசைப்பயணம்:

அதாவது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்களை கடந்து தற்போது 3வது சீசன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெற்று இருந்தவர் தான் பாடகி சஹானா நிரேன்குமார். இவர் இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றியும் பெற்றிருந்தார்.

பாடகி சஹானா நிரேன்குமார் திறமைகள்:

இவர் மாற்றுத்திறனியாக இருந்தாலும் பிரமாதமாக பாடுவார். இவர் பாடுவது மட்டும் இல்லாமல் பல இசைக்கருவிகளையும் வாசிக்கும் திறமை கொண்டவர். அது மட்டும் இல்லாமல் ஒரு நிமிடத்தில் அதிகப்படியான மியூசிக்கல் சார்ட்ஸ் சொல்லி இருக்கிறார். இதற்காக இவரை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இவருடைய பெயர் இடம்பெற்றிருக்கிறது. மேலும், இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படத்தில் இடம்பெற்ற தும்பித்துள்ளல் என்ற பாட்டை பியோனாவில் வாசித்து இருக்கிறார்.

வாய்ப்பு அளித்த இமான்:

இதை அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். இந்த வீடியோவை பார்த்த ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் சகானாவை பாராட்டி இருந்தார்கள். இதை பார்த்த இமான் அவர்கள் ஒரு படி மேலே சென்று சகானாவிற்கு பாட வாய்ப்பு தந்திருக்கிறார். இது தொடர்பாக இமான் அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவும் போட்டு இருக்கிறார். அதில், என்னுடைய இசையில் வெளிவர இருக்கும் மாலை படத்தின் பின்னணி இசையில் சஹானாவை இணைத்துக் கொண்டது நினைத்து சந்தோஷப்படுகிறேன். இந்த படத்தை மருத்துவர் இயக்குனர் முருகேஷ் இயக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

வாழ்த்தும் ரசிகர்கள்:

தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து இமானை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமீபகாலமாகவே இமான் அவர்கள் தன்னுடைய இசையில் பல மாற்றுத் திறனாளிகளுக்கு பாட வாய்ப்பளித்திருப்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலில் இவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்திக்கு தான் பாட வாய்ப்பு அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வைக்கோம் விஜயலட்சுமியை பாட வைத்தார். தற்போது இவர் மாற்றி திறனாளி சிறுமி சகானாவிற்கு வாய்ப்பு கொடுத்திருப்பதை குறித்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full