'காதலி மனைவியாக முடியாது, மனைவி காதலியாக முடியாது' மீண்டும் புகைந்த விவகாரம்- டி இமான் ஓபன் டாக்
காதல்-மனைவி குறித்து இசையமைப்பாளர் டி.இமான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இமான்- சிவகார்த்திகேயன் குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் இமான், மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது என்பது கஷ்டமான விஷயம். காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும்.
இமான்-சிவகார்த்திகேயன் சர்ச்சை:
அந்த வலியும் வேதனையும் ரொம்ப அதிகமாகவே இருக்கிறது என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் குறித்து பலர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் கூறி இருந்தார்கள். இதற்கு இமானின் முன்னாள் மனைவி மோனிகா, சிவகார்த்திகேயன் ரொம்ப டீசன்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. நட்பு என்ற அடிப்படையில் எங்கள் குடும்பத்தின் மேல் சிவகார்த்திகேயன் அக்கரையாக இருப்பார்.
மோனிகா பேட்டி:
இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று தான் இமான் துரோகம் செய்தாரு என்று சொன்னது எனக்கு புரியுது. ஆனால், அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுகிறார்கள். குடும்ப நண்பர்கள் இருந்தால் நண்பரோட குடும்பம் பிரியக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். இதில் சிவகார்த்திகேயன் மேலே என்ன தப்பு இருக்கு? என்று கூறி இருந்தார். மேலும், சிவகார்த்திகேயன் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.
இமான் சொன்ன விஷயம்:
இதை அடுத்து இமான் சமீபத்தில் பட நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது பத்திரிகையாளர் ஒருவர் ‘உங்களைப் பற்றி சமூக வலைதளத்தில் சரியாகவும் பேசுகிறார்கள், தவறாகவும் பேசுகிறார்கள். ஆனால், இது குறித்து நீங்கள் எந்த முற்றுப்புள்ளியும் வைக்கவில்லை. சிவகார்த்திகேயனுடன் அப்படி என்னதான் பிரச்சனை? ஏன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று கேள்வி கேட்டார்கள். இதற்கு இமான், ‘முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அதனை இறைவன் பார்த்துக் கொள்வான். இதற்கு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புகிறேன்' என்று கூறி இருந்தார்.
இமான் பேட்டி:
இப்படி இவர்களின் பிரச்சனை அடங்கி ஓய்வதற்க்குள் தற்போது இமான் மீண்டும் ஒரு பேட்டியில், நாம் காதலிக்கும் ஒரு பெண் மனைவி ஆவார் என்பது சந்தேகம் தான். அதே மாதிரி மனைவி காதலியாக குறிப்பாக நமக்கு பிடித்த காதலியாக கிடைப்பது கிடையாது. நம்முடைய குழந்தைகள் என்று வாழ்கிறோம். ஆனால், ஒரு கட்டத்தில் அதுவும் மாறிவிடுகிறது. நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகள் கிடைப்பதில்லை. அதேபோல நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களும் கிடைப்பதில்லை என்று உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறார்.