ஐஸ்வர்யா ராயின் முதல் படத்தில் இருக்கும் இவர் யாருனு தெரியுதா?

By Rajkumar · 27/6/2020

தற்போது சினிமா உலகில் மிகப்பிரபலமான டான்ஸ் கோரியோகிராபர் ஆக திகழ்பவர் பிருந்தா மாஸ்டர். இவர் 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பல முன்னணி நடிகைகள் படங்களில் கோரியோகிராபராக பணி புரிந்து இருக்கிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் பிருந்தா. பின் பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். பிறகு படங்களில் அசிஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்த்து இருந்த இவருக்கு சுந்தர் சியின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தான் டான்ஸ் மாஸ்டராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு இவர் பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய குடும்பமே நடனக் கலையில் கை தேர்ந்தவர்கள்.

நடன இயக்குனர் கலா, கிரிஜா ஆகியோரின் சகோதரி தான் பிருந்தா. இவரின் அக்கா கலா புகழ்பெற்ற நடன இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும், பிருந்தா 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடனம் சொல்லி இருக்கிறார். இவர் தன்னுடைய நடன இயக்கத்திற்கு தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா முதல் அமீர்கான், அக்சய்குமார், மோகன்லால், சிரஞ்சீவி உள்ளிட்ட பிற மொழி நட்சத்திரங்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் பிருந்தா அவர்கள் இவருவர் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு நடனம் சொல்லிக் கொடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து பலரும் ஆச்சரியத்துடன் உள்ளார்கள். தற்போதிருக்கும் மாஸ்டர் பிருந்தா இது!! என்று வியந்து பார்த்து உள்ளார்கள். அந்த புகைப்படத்தில் பிருந்தா அவர்கள் மிகவும் சிறு வயது போல் உள்ளார். இளம் வயதில் பிருந்தா மாஸ்டர் எப்படி இருக்கார் என்று நீங்களே பாருங்கள். இப்படி பல மொழி படங்களுக்கு நடனம் சொல்லித் தந்து தமிழ்நாட்டின் சிங்கப் பெண்ணாக திகழ்ந்து வருகிறார் பிருந்தா மாஸ்டர்.

https://twitter.com/BrindhaGopal1/status/1276425014527569926

தற்போது பிருந்தா மாஸ்டர் அவர்கள் இயக்குனராக ஆகப் போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் இவர் இயக்குனராகும் படத்தின் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவர் வரலாற்று மிக்க திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full