கவின் மற்றும் சாக்க்ஷிக்கு நல்லா நாரதர் வேல பாக்குறாங்க லாஸ்லியா.! ட்வீட் செய்த சிம்பு நண்பர்.!

By Rajkumar · 30/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இளசுகளின் பேவரைட் என்று ஒருவர் இருக்கத்தான் செய்கின்றனர். முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர். அதே போல இந்த சீஸனின் ஆரம்பத்தில் லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தார்.

https://twitter.com/dancersatz/status/1156059954068877313

ஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயரை இவரே டேமேஜ் செய்து கொண்டு வருகிறார். வடிவேலு பற்றி நக்கலாக நினைத்தது, ஜெயில் டாஸ்கில் ஓவராக செய்தது என்று இப்படி எத்தனையோ காரணத்தால் ரசிகர்கள் சிலர் இவரை வெறுத்து ஒதுக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது சினிமாவில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் சதீஷ், லாஸ்லியா குறித்து ட்வீட் செய்துள்ளார். சதீஷ் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் நண்பராக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் லாஸ்லியா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சதீஷ், லாஸ்லியா தனது முகத்தை காண்பிக்கிறார். சாக்ஷி-கவின் இடையே நல்ல நாரதர் வேலை செய்கிறார். மிகவும் மர்மமாக உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார். அதே போல ஜெயில் டாஸ்கின் போதும் லாஸ்லியா ஓவர் ஆக்டிங் செய்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் சதீஷ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full