நிவேதா மற்றும் யோகி பாபுவுடன் ரஜினி.! லீக் ஆன தர்பார் படப்பிடிப்பு வீடியோ.!

By Rajkumar · 24/4/2019

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இப்படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத். \

https://www.youtube.com/watch?v=OKvajnrgHvM

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினி மும்பையில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

இந்த நிலையில் படத்தின் சில காட்சிகள் தற்போது சமூக வளைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபுவுடன் ரஜினி பேசிக்கொண்டே வருவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full