தர்பார் படத்தில் வில்லன் குரலை எங்கயோ கேட்ட மாதிரி இருந்துச்சா. அது இந்த நடிகரின் குரல் தான்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் “தர்பார்” இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து உள்ளார். சூப்பர் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.
இந்த படத்தின் மூலம் தமிழில் இரண்டாவது முறையாக நடித்துள்ளார் நடிகர் சுனில் ஷெட்டி. இதற்கு முன்பாக தமிழில் 2001 ஆம் ஆண்டு ஷாம் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான '12B ' படத்தில் நடித்திருந்தார் சுனில் ஷெட்டி. தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் அதுவும் சூப்பர் ஸ்டார் படத்தில் வில்லன் கதாபாத்திரம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சுனில் ஷெட்டி. இந்த படத்தில் இவரது நடிப்பை விட இவரது குரல் பலருக்கும் பரிட்சயமான குரலாக இருந்திருக்கும்.ஆம், அந்த குரல் வேறு யாருடையதும் அல்ல பிரபல நடிகரான ஆதித்யா மேனனின் குரல் தான்.
இதையும் பாருங்க : பிலிங் பிலிங் ஸ்டைல் . புடவையில் இருந்து ஜிகு ஜிகு குட்டை ஆடைக்கு மாறிய ரம்யா பாண்டியன்.
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபரவர் ஆதித்யா மேனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜே.ஜே. என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் பில்லா படத்தில் அஜித்தை வேட்டையாட கிளம்பும் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார்.
இவர் கடைசியாக தமிழில் மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் என்ற படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரம், துணை நடிகர், காமெடி நடிகர் என பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் இதுவரை தென்னிந்திய மொழிகளில் நூறு படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். தற்போது இவர் முதன் முதலாக டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்து வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுனில் ஷெட்டிக்கு நடிகர் ஆதித்யா மேனன் அவர்கள் தான் டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார்.