தனது தங்கையின் இரண்டாம் திருமணம் குறித்து பேசிய அவரின் அக்கா பிரியதர்ஷினி

By Arun · 10/2/2024

தனது தங்கையின் இரண்டாம் திருமணம் குறித்து டிடியின் அக்கா அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் அனைவரும் அழைப்பார்கள். இவர் 21 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. மேலும், வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

டிடி திருமணம்:

மேலும், இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

View this post on Instagram

A post shared by LittleTalks (@littletalksmedia)

டிடி திருமணம் குறித்த சர்ச்சை:

இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. அதே போல 36 வயதை கடந்த டிடி இன்னமும் சிங்கிளாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால், டிடி இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என்று பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் வேட்டி ஒன்றில் பேசிய டிடிஎன் அக்கா பிரியதர்ஷினி டிடியின் இரண்டாம் திருமணம் குறித்து பேசி இருக்கிறார் அதில் பேசியிருக்கும் அவர் நெகட்டிவ் கமெண்டுகள் வருவது குறித்து நாம் என்ன செய்ய முடியும் அதைப்பற்றி கவலைப்படாமல் சென்று கொண்டே இருக்க வேண்டியது தான். ஒரு நெகட்டிவ் கமெண்ட் இருக்கு ஒரு லட்சம் பாசிட்டிவ் கமண்டுகள் வருகிறது அதனால் எதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

இரண்டாம் திருமண வதந்தி :

எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவள் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்து கொண்டே இருக்கிறார் என்று பேசிய பிரியதர்ஷினி டிடிகே இரண்டாம் திருமணம் அதுவும் மாப்பிள்ளை ஒரு பிசினஸ்மேன் என்றெல்லாம் வதந்திகள் வருகிறது யாரது அப்படி தெரிந்தால் கட்டி வைக்கலாமே யார் என்று தெரியவில்லை' என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full