கோலமாவு கோவிலாவில் நயனுக்கு டப்பிங் செய்த்திருந்தால் எப்படி இருக்கும்.! அசத்திய தீபா.!

By Rajkumar · 21/3/2019

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சொந்தக் குரலிலேயே படங்களுக்கு டப்பிங் செய்து விடுவார்கள். ஆனால் ஒரு சில ஹீரோயின்கள் மட்டுமே தங்களது சொந்த குரலில் டப்பிங் செய்வார்கள். இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான நடிகைகள் வேறு மாநிலத்தில் இருந்து வந்த நடிகைகளாகவே இருப்பதால் அவர்களின் மொழி உச்சரிப்பு அவ்வளவு நன்றாக இருப்பதில்லை.

https://twitter.com/sillymsdian/status/1108586313274589184

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு அதிகப்படியான படங்களில் டப்பிங் செய்துள்ளார் தீபா வெங்கட்.இயக்குனர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவிற்க்கு முதன் முதலில் டப்பிங் கொடுத்துள்ளார் தீபா. மேலும் இவரின் டப்பிங் நயன்தாராவிற்கு பிடித்து போக இவருக்கு தனி ஒருவன் படத்திற்கும் டப் செய்ய அழைப்பு வந்ததாக தெரிவித்திருந்தார்.மேலும் இதுவரை நயன்தாரா நடித்த பெரும்பாளான படங்களில் இவர் தான் நயன்தாராவின் குரலுக்கு சொந்தக்காரியாக இருந்துள்ளார்.

ராஜா ராணி,தனி ஒருவன், மாயா'இது நம்ம ஆளு, காஸ்மோரா, அறம், வேலைக்காரன் போன்ற பல படங்களில் டப் செய்துள்ளார். ஆனால், கோலமாவு கோகிலா படத்திற்கு நயன்தாரா தான் டப் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகை தீபா சமீபத்தில் நடந்த விருது விழாவில் கோல மாவு கோகிலா படத்தில் வரும் காசிக்கு நேரடியாக டப்பிங் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full