பணக்காரங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க, ஆனால் - மனம் திறந்து பேசிய நடிகை தீபா சங்கர்

By subhashini · 2/12/2025

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக திகழ்பவர் தீபா சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான்.

அதன் பின் இவருக்கு மிகப்பெரிய பிரபலம் ஏற்பட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான். வெகுளித்தமான கிராமத்து மனம்மாறாத இவரது பேச்சில் மயங்காதவர் யாரும் இலர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதற்குப்பின் இவர் டாக்டர், வல்லமை, தலைவன் தலைவி போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தீபா சங்கர் குறித்த தகவல்:

பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் பிரபல நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தொடர்பாக தீபா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பணக்காரர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

தீபா பேட்டி:

அந்த எண்ணத்தை என்னிடம் இருந்து தூக்கிப் போட வைத்தது சிவகார்த்திகேயன் தம்பியும் அவருடைய மனைவி தான். சிவகார்த்திகேயன் தம்பி என்னை ஒரு முறை அவர் வீட்டுக்கு வர சொல்லியிருந்தார். ஆனால், நான் போகவில்லை. காரணம் பயம் தான். பெரிய நடிகர்கள் வீட்டிற்கு போவோம். வாட்ச்மேன் நீ யாரு வெளியே போங்கன்னு சொல்லி அசிங்கப்படுத்தி விடுவார்கள். அதனால் என்ன செய்வது என்று நான் போகவில்லை.

சிவகார்த்திகேயன்-ஆர்த்தி பற்றி சொன்னது:

ஆர்த்தி, அவங்க பிறந்தநாளுக்கு ஹோட்டலுக்கு என்னை சாப்பிட அழைத்து இருந்தார். பெரிய நடிகர் நடிகைகள் எல்லாம் வந்திருந்தார்கள். ஆனால், ஆர்த்தி என் பக்கத்தில் அமர்ந்து நீங்க சாப்பிடணும், நீங்க சாப்பிடுற அழகை நான் பாக்கணும் என்று சொல்லிவிட்டு ரொம்ப நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை என் வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன் என்று எமோஷனலாக கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full