சமுத்திரக்கனி படங்கள் எல்லாம் பேசப்பட்டதே தவிர வரவேற்பு கிடைக்கல - பட விழாவில் பிக் பாஸ் தீபக் சொன்னது
சமுத்திரக்கனியின் பட விழாவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தீபக், முத்துக்குமரன் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரகனி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
அதை அடுத்து இவர் விஜயகாந்தை வைத்து நிறைந்த மனசு, சசிகுமாரின் நாடோடிகள், போராளி, ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2 போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இவர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் நடிகராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இருந்த யாவரும் வல்லவரே படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் திரு.மாணிக்கம்.
சமுத்திரக்கனி திரைப்பயணம்:
அறிமுக இயக்குனர் நந்தா பெரியசாமி தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
இதை அடுத்து தற்போது சமுத்திரக்கனி நடித்து உள்ள படம் 'ராமம் ராகவம்'. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அப்பா – மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்த படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
சமுத்திரக்கனி பட விழா:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்புதான் சென்னையில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் பிக் பாஸ் 8 போட்டியாளர்களான தீபக், முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய தீபக், என்னுடைய குருநாதர் சமுத்திரகனி சார். அவர் இயக்கிய சீரியல்களில் தான் நான் முதன் முதலாக நடித்தேன். இவர் சின்னத்திரையில் ஒரு வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதற்குப் பிறகுதான் அவர் சினிமாவுக்கு போனார். அவர் இயக்கிய படங்கள் எல்லாம் பேசப்பட்டதே தவிர பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
https://www.youtube.com/watch?v=pJzZwP1c61o
விழாவில் தீபக் சொன்னது:
அதற்கு பிறகு மறுபடியும் அவர் சின்னத்திரை பக்கம் வந்தார். பின் மீண்டும் அவர், நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு என்று சினிமாவுக்கு வந்தார். உதவி இயக்குனராக சேர்ந்து அவர் நிறைய படங்கள் இயக்கிருந்தார். இப்போ பெரிய நடிகராக உருவெடுத்திருக்கிறார். அதற்குப் பிறகும் அவர் நிற்கவில்லை. எப்பவும் வாழ்க்கையில் நாம் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குடா என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நம்முடைய ஓய்வு காலத்தில் திரும்பி பார்க்கும் போது நம்முடைய 20 படைப்புகளாவது இருக்கணும் என்று சொல்வார். இன்னைக்கு அவருடைய மகனாக என்னை பாவித்து ஒரு அங்கீகாரம் கொடுத்தது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை பேசுகிறது. நானும் ஒரு தந்தை தான். ஒரு வயதுக்கு மேல் எனக்கும் என் மகனுக்குமான உறவு எப்படி இருக்கும் என்று நான் இந்த படத்தின் மூலமாக பார்க்க போகிறேன் என்று கூறியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=T5HRHe-6YM4
முத்துக்குமரன் சொன்னது:
இவரை அடுத்து விழாவிற்கு வந்த முத்துக்குமரன், ஒரு பத்திரிகையாளராக சமுத்திரகனி அண்ணனை தலைக்கூத்தல் படத்துக்காக பேட்டி எடுத்திருந்தேன். பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிற இந்த மனிதர் சமூகத்தை நிறுத்தி, பொதுவுடமைகளையும், தந்தை தாய், போன்ற உறவுகளின் உணர்வுகளையும் கொஞ்சம் சத்தமாக சொல்லி நமக்கு வழிகளை போட்டுக் கொடுத்த ஒரு எளிய மனிதர். கனிவான அகத்துக்கும் கடுமையான முகத்துக்கும் சொந்தக்காரராக இருக்கக்கூடிய தந்தைகளுக்கான ஒரு உருவம் என்றால் அது சமுத்திரக்கனி அண்ணன் தான். 'பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்த்தல் அதனினும் இலமே' என்ற கனியன் பூங்குன்றன் சொன்ன வார்த்தைக்கான அடையாளமாக இந்த சிறுவனை இந்த மேடையில் உட்கார வைத்து சமுத்திரக்கனி அண்ணனுக்கு ரொம்ப பெரிய நன்றி. 'நான் வீழ்ந்துவிட்டால் என்ன, என் துப்பாக்கியை ஏந்திக் கொள்ள என் தோழர்கள் தயராக இருக்கிறார்கள். தோட்டாக்கள் ஒருபோதும் தூங்குவதில்லை' என்று சேகுவேரா சொல்லுவார். இயக்குனர்களை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும் இந்த சமுத்திரம் என்றும் வற்றாது பெரிய நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.