பொதுவாகவே படங்களில் காதல், சண்டை காட்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு நகைச்சுவையும் ரொம்ப முக்கியமான ஒன்று. நகைச்சுவை மக்களை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்பதை தமிழ் சினிமா நடிகர்கள் பலர் நிரூபித்துள்ளார்கள். ஆனால், ஒருசில நகைச்சுவையால் சிலர் மக்களின் மனதை கலங்கடித்தும் உள்ளார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த டிக்கிலோனா படத்தில் ஊனமுற்றவர்களை குறித்து சந்தானம் தாழ்வாக பேசியிருப்பதாக காட்சி வெளிவந்துள்ளது.

இது பலரது மனங்களில் பாதித்ததாகவும் இந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் அந்த காட்சிகளை கண்டித்து டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நகைச்சுவை என்பது மன இறுக்கத்தை விலக்கி மனதை இலகுவாக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையின் சிரிப்பை போல, தாயின் மடியைப் போல, அன்பு காதலியின் பொன்முகத்தை போல இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் யாருடைய மனதையும் நோகடிக்கும் வகையில் நகைச்சுவை இருக்கக்கூடாது.

Advertisement

ஏதோ இயற்கையின் காரணத்தினால் ஏற்பட்ட உடல் பாதிப்பை நகைச்சுவைக்கு பொருளாக்கி காட்சிப்படுத்துவது ஒரு நல்ல சமூகத்தின் பண்பே கிடையாது. இயற்கை அன்னையின் சரிசமமான பிள்ளைகளான மாற்றுத்திறனாளிகளை கிண்டலடிப்பது சரியானது இல்லை. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொன்ன தந்தை பெரியார் வழியாக கேட்கிறேன். எங்களுக்கும் மானமும் அறிவும் கிடையாதா சந்தானம். டிக்கிலோனா படத்தில் கம்பு ஊன்றி நடக்கும் எங்களை சைடு ஸ்டாண்ட் போட்டு நடக்கிறோம் என்று கேலி செய்துள்ளார்.

தமிழ் வளர்த்த மூதாதைகள் பலர் கம்பு ஊன்றி வளர்ந்தவர்கள் தான். இது உங்களுக்கு தெரியாத சந்தானம். கம்பு ஊன்றி நடக்கும் பல மாற்று திறனாளிகள் நம் நாட்டிற்கு உலக நாடுகள் மத்தியில்
சென்று பல மாடல்களை பெற்று தந்துள்ளனர். ஊனம் இல்லாதவர்களை விட எங்கள் மக்கள் தான் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். கால் இல்லாமல் நடப்பது எவ்வளவு ஒரு கடினமான செயல். அவர்கள் தினம் தினம் தங்கள் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வாழ்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் தான் போராளி. அவர்களை இப்படி இழிவாக நகைச்சுவை படுத்துவது சரியானதல்ல. நாங்கள் சொல்லவேண்டியதை சொல்லி விட்டோம். எங்கள் தரப்பு நியாயத்தை ஊடகங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதை கோரிக்கையாக முன் வைக்கிறோம் என்று கூறி இருந்தார்.

Advertisement
Advertisement