சென்னையில் இருந்து வரும்போது இது எல்லாம் வாங்கிட்டு வாங்க என்று கணவருக்கு உத்தரவு போட்ட தீபிகா படுகோன்

By subhashini · 27/1/2020

கபிர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "83". இந்த படம் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதை ஆகும். இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனதும், 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதும் பற்றிய கதையாகும். இந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளது. இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்து உள்ளார்கள்.

கபில்தேவ் ஆக இந்த படத்தில் ரன்வீர் சிங் நடித்து உள்ளார். ஸ்ரீகாந்த் ஆக ஜீவா, மதன்லாலாக ஹர்டி சாந்து, சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் படத்தில் தீபிகா படுகோன், சாகிப் சலீம், ஹார்டி சந்து உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று தான் வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட கமலஹாசன், கபில்தேவ், ஸ்ரீகாந்த், ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் தன்னுடைய கணவரிடம் சென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கி கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகர் ரன்வீர் சிங் அவர்கள் கிரிக்கெட்டின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்துக்கு கீழே அவர் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோன் அவர்கள் கமெண்ட் போட்டு இருந்தார். இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

அதில் தீபிகா படுகோன் கூறியது, சென்னையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இருந்து ஒரு கிலோ மைசூர் பாகு மற்றும் ஹாட் சிப்ஸ்ஸில் இருந்து உருளைக்கிழங்கு சிப்ஸ் இரண்டரை கிலோ. இது இல்லாமல் வாங்காமல் திரும்ப வரவே கூடாது என்று கூறியிருந்தார். ரன்வீர் சிங்க்கு நடிகை தீபிகா போட்ட உத்தரவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. நடிகை தீபிகா படுகோன் தென்னிந்திய பொண்ணு தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். தீபிகாவின் கமென்டை அடுத்து இயக்குனர் கபீர் கானின் மனைவி மினி மாத்தூர் அவர்கள் நீங்களும் இதை வாங்கிட்டு வர மறந்துடாதீங்க, என்றும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full