ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க தீபிகா படுகோன் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிகை மட்டுமில்லாமல் விளம்பர அழகியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படத்தில் மூலம் தான் தீபிகா சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஐம்பது படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார். மேலும், பாலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தீபிகா படுகோன். திருமணத்துக்கு பின்னரும் தீபிகா படுகோன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

தீபிகா படுகோன் திரைப்பயணம்:

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் பதான். ஷாருக்கான் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் படத்தை ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்தது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி இருந்தது. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது தீபிகா படுகோன் அவர்கள் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஜவான் படம்:

இந்த நிலையில் ஜவான் படத்தில் தீபிகா படுகோன் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, அட்லி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து இருக்கிறார். இந்த படம் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Advertisement

படம் குறித்த தகவல்:

விஜய் சேதுபதி வில்லனாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படம் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஷாருக்கான் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். இந்த மாதம் இறுதியில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகும். இந்த படம் பாலிவுட்டில் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. படத்தின் ரிலீஸாக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

தீபிகா வாங்கிய சம்பளம்:

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வாங்கி இருக்கும் சம்பளம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக, இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். இவருக்கு கதாநாயகி நயன்தாராவை விட அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா 11 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். ஆனால், தீபிகா படுகோனுக்கு 17 முதல் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி இருக்கிறார். வில்லனாக நடித்த விஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். ஜவான் படத்தின் மூலம் இந்திய திரை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வில்லன் என்ற சாதனையை விஜய் சேதுபதி படைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

Advertisement