அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன தெய்வம் தந்த வீடு சீரியல் நடிகை. என்ன ஆச்சி என்று பதறும் ரசிகர்கள்.
பிரபல சீரியல் நடிகை ஒருவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் உள்ளார். மேலும், அவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எல்லாரும் இவரா?? அந்த நடிகை என்று அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள். முன்பெல்லாம் சீரியல்களை வயது ஆனவர்களும், குடும்பப் பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள். ஆனால், தற்போது வளர்ந்து வரும் காலங்களில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் சீரியல்களைப் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதனால் தான் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் 'தெய்வம் தந்த வீடு'. இந்த சீரியலில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்ன திரைக்கு அறிமுகமானவர் நடிகை மேக்னா வின்சென்ட்.
தற்போது பொன் மகள் சீரியலில் மேக்னா அவர்கள் ரோகிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இப்போது புது திருப்பங்களைக் கொண்டு வந்து உள்ளார் இயக்குனர். அது என்னவென்றால் நடிகை மேக்னா அவர்கள் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் வயதான பாட்டி ஆக நடித்து உள்ளார். இந்த தோற்றத்தை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் முதன் முதலாக மலையாளத்தில் பரங்கிமலா என்ற படத்திலும், தமிழில் ஒரு சில படத்திலும் நடித்து உள்ளார். ஆனால், இவருக்கு சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காததால் தான் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.
மலையாள மொழி மூலம் தான் இவர் சின்னத்திரை சீரியலுக்கு அறிமுகமானார். பின் இவர் மலையாளத்தில் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் சூர்யா டிவியில் மோகக்கடல், சக்ரவாகம், ஏசியாநெட்டில் ஆட்டோகிராஃப், மழவில் மனோரமா சேனலில் பரினாயம், இந்திரா என எல்லா சேனல்களிலும் ஒரு கலக்கு கலக்கினார். அதற்கு பிறகு தான் நடிகை மேக்னா அவர்கள் தமிழில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானார். அதிலும் பல பெண்கள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் நடிகை மேக்னா வின்சென்ட் தான். கதை முழுக்க முழுக்க அவரை வைத்து தான் நிகழ்ந்தது. மேலும், ஒரு மருமகள் எப்படி இருக்க வேண்டும், புகுந்த வீட்டிலும், பிறந்த வீட்டிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கதையில் உருவாகிய தொடராகும். இந்த சீரியல் சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது.
இந்த சீரியல் முடிந்தவுடன் பல பேர் வருத்தப்பட்டார்கள். இதனை தொடர்ந்து நடிகை மேக்னா அவர்கள் தற்போது அதே விஜய் டிவியில் "பொன்மகள் வந்தாள்" என்ற தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவளும் நானும் என்று சீரியலிலும் நடித்து இருக்கிறார். இவர் 2017 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அது குறித்து அவரை பல பேர் கிண்டலும், கேலியும் செய்து வந்து இருந்தார்கள். அப்போது நடிகை மேக்னா சர்ச்சை நாயகி ஆகவே திகழ்ந்தார் என்று சொல்லலாம்.