தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் என்னவானர்.! இவருக்கா இந்த நிலை.!

By Rajkumar · 2/1/2019

சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள்.இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர்.

இந்த சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பல தெய்வமகள் சீரியல் தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அண்ணியாருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது, ஆனால் இது வரை அவரை மீடியா கண்களுக்கு அவ்வளவாக அண்ணியார் காயத்ரி காட்டியது கிடையாது. அவரது மகளின் பெயர் பூஜா தற்போது தனது 10 ஆம் வகுப்பை முடித்திருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர், குடும்பத்தை மிகவும் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் வர வேண்டும் என்று பிராத்தனை செய்துகொள்கிறேன் என்று பேசியுள்ளார். புகழ்பெற்ற சீரியலில் நடித்த அண்ணியருக்கா சீரியல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full