தமிழ் சினிமாவில் பல்வேறு சகோதர சகோதரி நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா – கார்த்தி, ஜீவா – ரமேஷ், அருண் விஜய் – வனிதா, சிம்ரன் – மோனால், நக்மா – ஜோதிகா இப்படி கூறிக்கொண்டே போகலாம், அந்த வகையில் தமிழ் சினிமாவில் தேவையணி மற்றும் நகுலும் ஒரு முக்கிய நட்சத்திர நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் சினிமாவில் 90-ஸ்களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அப்பாவின் பெயர் ஜெயதேவ். இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். அதில் நகுலும் நடிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று.

தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தேவையணி முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘கோயல் ‘ என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்த படம் வெளியாகவே இல்லை. அதன் பின்னர் தமிழில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘தோட்டா சிணுங்கி ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். பின்னர் வருடங்கள் செல்ல செல்ல படங்களின் வாய்ப்பு குறையவே திருமணத்திற்கு பிறகு சீரியல் பக்கம் காலடி வைத்தார் , அங்கேயும் வெற்றி பெற்றார் . இவருடைய தம்பி நகுல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த காதலில் விழுந்தேன் திரைப்படம் இளசுகள் நல்ல வரவேற்பை பெற்றது., மேலும் இவர் நடித்த வல்லினம், தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும் போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

இதையும் பாருங்க : சாண்டி மகள் லாலாவுடன் கொஞ்சி விளையாடும் கமல்.. வைரலாகும் க்யூடான புகைப்படங்கள்..

Advertisement

தொடக்கத்தில் நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்போது வெற்றிக் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். இறுதியாக செய் என்ற படத்தில் நடித்திருந்தார் நகுல். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் நகுல், எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தினை காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களை சச்சின் தேவ் என்பவர் தான் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் தான் நகுல் மற்றும் தேவையானியின் தாய் லட்சுமி காலமாகிய. இருந்தார் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்டவர் லட்சுமி. இவர் கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த ஜெயதேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மும்பையில் வசித்து வந்த இவர்களுக்கு தேவயானி, நகுல், மையூர் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் சோகமான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு தான் நகுல், தேவையானியின் தந்தை காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

சகோதரர்களாக இருந்தாலும் தேவையானி மற்றும் நகுல் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. இந்த நிலையில் சிறு வயதில் நகுல் மற்றும் தேவையானி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் இருவருமே நன்றாக கொழுக் முழுக் தோற்றத்தில் தான் இருக்கின்றனர்.

Advertisement
Advertisement