'அவனுக்கு திறமை இருக்கு வாய்ப்பு கொடுங்கள்' தேவையானி பேச்சை கேட்டு மேடையிலேயே அழுந்த நகுல்
'வாஸ்கோடகாமா' பட விழாவில் நகுல் குறித்து தேவயானி உருக்கமாக பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நகுல். இவர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இருந்த 'பாய்ஸ்' படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பின் இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னுடைய உடலை குறைத்து இருந்தார்.
அதன் பின் இவர் 'காதலில் விழுந்தேன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். அதற்குப் பின் இவர் வல்லினம், தமிழுக்கு எண் 1 ஒன்றை அழுத்தவும், செய், எரியும் கண்ணாடி போன்ற படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும், இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிலைத்து வைக்க போராடிக் கொண்டிருக்கிறார்.
வாஸ்கோடகாமா படம்:
இதனால் சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் நகுல். தற்போது இவர் அறிமுக இயக்குனர் ஆர் ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் 'வாஸ்கோடகாமா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் முடிவடைந்து ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அருண் என்வி இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் நடந்து வருகிறது.
டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா:
இந்த நிலையில் இந்த படத்தினுடைய டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று இருக்கிறது. இதில் நகுல், கே எஸ் ரவிக்குமார், பயில்வான் ரங்கநாதன், ஜெகன் உட்பட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த விழாவில் நடிகை தேவயானியும் கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் தேவயானி, என்னுடைய சின்னத்தம்பி நகுல். அவர் மல்டி திறமை கொண்டவர். அவரை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. நான் அக்கா இல்லை அம்மா.
விழாவில் தேவையானி சொன்னது:
அவருக்கும் எனக்குமான உறவு ரொம்ப அற்புதமானது. நான் அவருடைய பெரிய ரசிகை. பாய்ஸ் படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன் படத்தை பார்க்கும்போது ரொம்ப டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறார். அது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவர் நடிகர் மட்டும் இல்லாமல் பாடுவார், இசைப்பார் பல திறமைகளை கொண்டவர். நல்ல கதை, நல்ல இயக்குனர், நல்ல கதாபாத்திரத்திற்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். எல்லோருக்குமே ஒரு நேரம் வரும்ன்னு சொல்லுவாங்க. அந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
https://youtube.com/shorts/_7vaqj289bE?si=h3TjDlMyppleL6xL
நகுல் குறித்து சொன்னது:
கண்டிப்பாக நகுலுக்கு அந்த நேரம் வரும். அவரோட திறமையை காண்பிப்பார். இது அவர் என்னுடைய தம்பியாக இருப்பதால் நான் சொல்லவில்லை. எல்லா விதத்திலும் அவருக்கு திறமை இருக்கிறது. அவருடைய திறமையை நிரூபிக்கும் இடம் கண்டிப்பாக கிடைக்கும். அக்கா தம்பி இருவருமே சினிமா துறையில் இருப்பது ஒரு அபூர்வமான காம்பினேஷன். எங்கேயுமே இதுபோல கிடையாது. இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இன்னும் நல்ல படங்கள் கொடுக்க என்னுடைய வாழ்த்துக்கள். எப்பொழுதும் நல்ல எண்ணத்துடன் இருக்க வேண்டும். நம்பிக்கையை மட்டுமே விட்டுவிடாதே, பாசிட்டிவாக யோசி கண்டிப்பாக உனக்கு வெற்றி கிடைக்கும் என்று பேசியிருந்தார். தன்னுடைய அக்கா தேவயானி பேசுவதை கேட்டு மேடையிலேயே அழுந்து விட்டார். பின் தன்னுடைய அக்காவை கட்டி பிடித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.