நானும் சரத்குமாரும் சேர்ந்தால் வெற்றி தான் - நெகிழ்ச்சியில் நடிகை தேவையானி
3BHK படத்தின் நன்றி விழாவில் நடிகை தேவையானி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 3BHK. இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா, சைத்ரா ஜே. அச்சர் உட்பட பல சைத்ரா நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அம்ரித் இசையமைத்து இருக்கிறார். தினேஷ் பி கிருஷ்ணா, ஜிதின் ஆகியோர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஷ்வா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் விழா நடைபெற்று இருந்தது. இதில் பட குழுவினர் அனைவருமே கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய தேவையானி, எனக்கு இந்த படத்தில் சாந்தி கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனருக்கு ரொம்ப நன்றி. நான் கிட்டத்தட்ட 30 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன்.
3BHK படம்:
அருண் விஸ்வா மாதிரியான தயாரிப்பாளரை நான் இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். காரணம், தன்னுடைய படைப்பை நேசித்து நம்பிக்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் தயாரிப்பாளரை இப்போதுதான் பார்க்கிறேன். நான் ரிலீசுக்கு பிறகு திரையரங்குகளில் மக்கள் ரியாக்சனை பார்ப்பது இதுதான் முதல் முறை. அப்படி ஒரு அருமையான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.
நன்றி விழா:
சமீப காலமாக திரையரங்குகளில் குழந்தைகள், பெண்கள் என்று எல்லோருமே படம் பார்க்கிறார்கள். இது போன்ற விஷயங்கள் வருவது அபூர்வம். நாம் வன்முறை, கொள்ளை, டென்ஷன் என்று தான் பார்த்து வருகிறோம். அந்த சமயத்தில் 3BHK மாதிரி படங்கள் வரும் போது மக்கள் அதை கொண்டாடுகிறார்கள். இயக்குனர் ஸ்ரீ கணேசை நாம் கொண்டாட வேண்டும். அவர் இதுபோல நிறைய படங்கள் கொடுக்க வேண்டும். சரத்குமார் சார் உடன் நான் எப்போது இணைந்து நடித்தாலுமே அது சந்தோஷமாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=CTryaafUbJo
தேவையானி சொன்னது:
அவருடன் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி படமாக தான் இருக்கிறது. இந்த படத்தில் நடித்திருக்கும் சைத்ரா, மீதா வளர்ந்து வரும் நடிகைகள். என்னைப்போல ரொம்பவே சிம்பிளாக இருக்கிறார்கள். அவர்களை போன்ற நடிகைகள் நமக்கு தேவை. சித்தார்த் நடிக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமானதாக தான் இருக்கும். அவர் இயக்கும் பக்கத்தில் இருந்து வந்தவர் என்பதால் படத்தின் அத்தனை விஷயங்களையும் கவனிக்கிறார் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
கதைக்களம்:
படத்தில் நாயகன் சரத்குமார். சரத்குமாரின் மனைவி தேவையானி. இவர்களின் பிள்ளைகள் தான் சித்தார்த், மீதா. இவர்களை வாசுதேவன் அண்ட் ஃபேமிலி என்று சொல்வார்கள். இவர்களுடைய கனவே சொந்த வீடு வாங்குவது தான். அதற்காக குடும்பமாக சேர்ந்து ரொம்பவே கடுமையாக உழைக்கிறார்கள். சித்தார்த்திற்க்கு சுத்தமாகவே படிப்பு ஏறவில்லை. தன்னுடைய பிள்ளைகளை எப்படியாவது படித்து பெரிய ஆளாக்க வேண்டும் என்றும் சொந்தமாக வீட்டை வாங்க வேண்டும் என்று சரத்குமார் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
பின் தான் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சரத்குமார் சேர்த்து வைக்கிறார். அப்போது சரத்குமார் பல போராட்டங்களை சந்திக்கிறார். கடைசியில் சரத்குமார் சொந்தமாக வீடு வாங்கினாரா? சித்தாரத்திற்கு வேலை கிடைத்ததா? தன்னுடைய மகளின் கல்யாணத்தை நல்லபடியாக சரத்குமார் நடத்தி வைத்தாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.