தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இறுதியாக இவர் கமலை வைத்து எடுத்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். அதிலும் கடைசி சில நிமிடங்களில் rolex என்ற கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தி இருப்பார் சூர்யா.

மேலும், இந்த படத்தில் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ஏஜன்ட் டினா தான். டினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வசந்தி. இவர் ஒரு டான்ஸர் ஆவார். இவர் முப்பது வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் ஆன கலா மாஸ்டர் போன்ற நடன இயக்குனர்களிடம் துணை நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

Advertisement

மேலும், தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ் அவர்களிடம் 20 வருடங்களாக துணை நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற பலரது படங்களில் நடனமாடி இருக்கிறார்.30 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்தும் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டது விக்ரம் திரைப்படத்தின் மூலம் தான். இந்த வாய்ப்பு அவருக்கு தினேஷ் மாஸ்டர் மூலமாக தான் கிடைத்தது.

இந்த படத்தின் முதல் காட்சியிலேயே பகத்ஃபாசிலுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் சண்டைக் காட்சியில் இவர் காட்டிய ஆக்ஷன் மற்றும் நடிப்பும் ரசிகர்ளை வியப்பில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் இந்த கதாபாத்திரத்தை தவற விட்டுள்ளதாக பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா கூறியிருக்கிறார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை நடிகையான தேவி பிரியாவை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

Advertisement

90ஸ் ரசிகர்களின் மிகவும் பிரபலமான சித்தி சீரியலில் ஒரு கல்லூரி பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார் தேவிப்பிரியா அதை தொடர்ந்து பல சீரியல் வில்லியாக நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் காவல் அடைந்தார் இதுவரை இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறார். மேலும், பல திரைப்படங்களில் கூட நடித்து இருக்கிறார். அதே போல இவர் ஒரு சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவி பிரியா, விக்ரம் படத்தின் டீனா கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பை மிஸ் செய்தது குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசியதாவது ‘இந்த படத்தில் டீனா கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுப்பதற்காக ஆடிஷன் கூட சென்று விட்டேன். ‘டீனா ரிப்போர்ட்டிங் சார்’ என்ற வசனங்களை பேசி விட்டேன். ஆனால், என்னுடைய குரல் மிகவும் சிறிதாக கேட்கிறது. எங்களுக்கு ஒரு பெரிய பொம்பளை பேசுவது போல இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அந்த வாய்ப்பை தவறவிட்டதை எண்ணி நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement