அசீம் அண்ணா அப்படி தள்ளவே இல்ல - அந்தர் பல்டி அடித்து தன்லட்சுமி. குறும்படம் போட்ட ரசிகர்கள்.

By Manikandan · 7/2/2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து அசீம் விஷயத்தில் பலர் ஆதரவாகவும் பலர் எதிர்த்தும் பேசி வருகின்றன மேலும் மற்றவர்களை இழிவாக பேசி விளையாட்டை தவறான முறையில் விளையாடினால் பிக் பாஸில் வெற்றி வெற்றி பெற முடியுமா என்று பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அசீமிற்கு டைட்டில் கிடைத்தன் காரணமாக பலர் விஜய் டிவியை விமரிசித்து வரும் நிலையில் அசீம் ரசிகர்கள் எப்போதும் அசீமிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவும் எதிர்ப்பும் :

இப்படிப்பட்ட நிலையில் தான் அசீம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்றும் மரியாதை குறைவாக பேசுகிறார் என்றும், தனலட்சிமியை பொம்மை டாஸ்கின் போது தவறான இடத்தில் கையை வைத்து தள்ளினார் என்ற குற்றசாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்து அபியூஸர் அசீம் என்று பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து மகேஸ்வரி கூட தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அசீம் தனலட்சிமியிடம் கேட்ட கேள்வி :

இந்நிலையில் அசீம் டைட்டில் வென்றது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறிய நிலையில் அசீம் ரசிகர்களுடன் முதல் முறையாக நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளரான தனலட்சிமிக்கு போன் செய்து உன்னை தவறான இடத்தில் தொட்டேனா தங்கச்சி என்று கேட்டார் அதற்கு தனலட்சிமி இல்லை அண்ணா என்று கூறினார்.

அசீம் அப்யூசர் கிடையாது :

இப்படிப்பட்ட நிலையில் தான் தனலட்சுமி மற்றும் அசீம் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி அப்யூஸ் என்றால் என்ன? அப்யூஸ் என்பது ஒரு பெண்ணை தவறான நோக்கத்தில் தொடுவது தானே. அப்படியென்றால் என்னிடம் அசீம் தவறாக நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை விளையாட்டின் போதுதான் பிடித்து கீழே தள்ளினாரே தவிர தவறான நோக்கத்தில் தொடவில்லை, எனவே இது அப்யூஸ் கிடையாது என்று கூறினார்.

விக்ரமனும் அப்யூசர் தான் :

மேலும் பேசிய தனலட்சிமி கூறுகையில் "இதனை வைத்து அசீமை அப்யூசர் என்றால் விக்ரமனும் தான் அப்யூசர். விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் விளையாடும்போது என்னுடைய கால்களை பிடித்து இழுத்து விளையாடினார். மேலும் என்னுடைய உடையை இழுத்த நபருக்கு ஆதரவாக பேசினார். அதுவும் அப்யூஸ் தானே? அப்படியிருக்க அசீம் செய்தது மட்டுமே எப்படி அப்யூசாக இருக்க முடியும் என்று கூறினார் தனலட்சிமி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full