1000 ஸ்கிரீன் கிடைக்கும், இது தான் பெரிய சாதனை - குட் பேட் அக்லி படம் பற்றி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சொன்னது
குட் பேட் அக்லி படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’ .
இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படம் வந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி இருந்தார்கள்.
குட் பேட் அக்லி படம்:
இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
படம் குறித்த தகவல்:
இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகியிருந்தது. வெறும் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனையும் படைத்தது. கோலிவுட்டிலே இந்த சாதனையை எந்த படமும் செய்யவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் குட் பேட்அக்லி படம் குறித்து கூறியிருந்தது, கண்டிப்பாக குட்பேக் அட்லி படம் ரசிகர்களுக்கானதாக தான் இருக்கும். கோலிவுட்டிலேயே மிகப்பெரிய அளவில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் சாதனை படைத்திருக்கிறது. அதை ரசிகர்கள் எல்லோருமே கொண்டாடி இருந்தார்கள். ஏப்ரல் மாதத்தில் படம் வெளிவருவதாக கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தனுஷ் உடைய இட்லி கடை படமும் வருவதாக சொல்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=05UMcoclPg0
படம் குறித்து சொன்னது:
இரண்டு படமுமே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படும். அதனால் குட் பேட் அக்லி படம் வந்து இரண்டு வாரம் கழித்து, ஒரு மாதம் கழித்து அந்த படம் வந்தால் வசூல் ரீதியாக பிரச்சனை இருக்காது. இரண்டு படமுமே நன்றாக வசூல் செய்யும். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு படம் வந்தால் கொஞ்சம் வசூல் தான் அடிப்படும். ஒருவேளை இட்லி கடை படத்தினுடைய ரிலீஸ் தேதி தள்ளிப் போனால் கண்டிப்பாக குட் பேட் அக்லி படத்திற்கு ஆயிரம் திரையரங்கு கிடைக்கும். அதில் எந்த மாற்றமுமே இல்லை என்று கூறி இருக்கிறார்.