சிவகார்த்திகேயன் சொன்னது தப்பே இல்ல - 3 பட கேப்ரில்லாவின் கண்டு வியந்த ரசிகர்கள்.

By Rajkumar · 2/9/2020

சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி நாம் பார்த்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்கள் பேபி சாரி பேபி எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார்கள் அதேபோல சின்னத்திரையிலும் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அந்தவகையில் கப்ரில்லோ சார்ல்டன் ஒருவர். இவர் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சி மூலம் தான்.

https://www.instagram.com/p/CEla3b8DSl1/

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் நடனத்தில் ஆர்வம் உள்ள நபர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் ஜோடி என்ற நடன நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் கேப்ரில்லா. 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

மேலும், ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டத்தை வென்ற இவருக்கு பின்னர் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c' பிரிவு அதாவது '7 சி' என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தற்போது இவருக்கு 20 வயது ஆகிறது, கடந்த சில காலமாக சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் இவரை காணமுடிவதில்லை. சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் 3 படத்தில் சிவகார்த்திகேயன் சொன்னது தப்பே இல்ல. உங்க பின்னாடியே போய்யிருக்கலாம் என்று ஏங்கி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full