எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலைன்னு கேட்ட எஸ் ஜே சூர்யா- 'ராயன்' பட விழாவில் மனம் திறந்த தனுஷ்

By subhashini · 8/7/2024

'ராயன்' திரைப்பட விழாவில் எஸ்.ஜே.சூர்யா குறித்து தனுஷ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் 'ராயன்' பட செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது தனுஷ் ‘ராயன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இது இவரின் 50வது படம் ஆகும். இந்த படத்தை தனுஷே இயக்கி நடித்து இருக்கிறார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷின் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

'ராயன்' பட இசை வெளியீட்டு விழா:

இந்த விழாவில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் தனுஷ், நான் முதன் முதலாக படத்தில் நடிக்கும் போது இந்தளவிற்கு வருவேன் என்று நினைக்கவே கிடையாது. காரணம், அவ்வளவு கிண்டல்கள், கேலிகள், அவமானங்கள், துரோகங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அதை எல்லாம் தாண்டி தான் நான் இங்கு இருக்கிறேன். அதற்கு காரணம் நீங்கள் கொடுக்கும் இந்த கரகோஷம் தான்.

விழாவில் தனுஷ் சொன்னது:

ஆங்கிலம் எனக்கு ஒழுங்காகவே பேச வராது. ஆனால், என்னை ஹாலிவுட்டில் நடிக்க வைத்தீர்கள். படத்தில் எல்லா நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தார்கள். ஒன்றுமே தெரியாத என்னை நடிகன் ஆகியது என்னுடைய அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் தான். அவர்தான் என்னுடைய ஆசான், குரு. மேலும், எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். அவருக்கு நான் முதல் நாள் சார்ட் வைக்கும்போதே, நீங்கள் எதற்காக டைரக்ட் செய்கிறீர்கள்? என்று கேட்டார்.

எஸ்.ஜே.சூர்யா குறித்து சொன்னது:

உடனே நான், முதல் நாளே இப்படி கேட்டீர்களே சார் என்று கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் பெரிய ஸ்டார். உங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது எதற்கு இந்த டைரக்ஷன் எல்லாம் என்று கேட்டார். அந்த வார்த்தை தான் என்னை பயங்கரமாக உழைக்க வைத்தது. காரணம், எஸ்.ஜே.சூர்யா சார் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதோடு சூட்டிங் ஸ்பாட்டில் நான் என்ன சொன்னாலும், முகம் சுளிக்காமல் எனக்காக செய்து கொடுத்தார் என்று எஸ்.ஜே.சூர்யா மாதிரியே மிமிக்ரி செய்து தனுஷ் பேசியிருக்கிறார்.

தனுஷ் திரைப்பயணம்:

மேலும், தனுஷ் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘கேப்டன் மில்லர்’ படம் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றிருந்தது. வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். இதை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full