மீண்டும் இரட்டை வேடத்தில் அசத்த வரும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா.!
தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். திறமைமிக்க நடிகரான இவர் இந்தி, ஹாலிவுட் என்று ஒரு ரவுண்ட் வந்து விட்டார். தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன் ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே 'கொடி' திரைப்பட இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க திட்டம்மிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இது குறித்த அறிவிப்பை நடிகர் தனுஷே தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, ” ‘கொடி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் துரை.செந்தில்குமார் எனக்காக ஒரு கதை எழுதி வருகிறார். இப்பபடம் குறித்த மற்றத் தகவல்கள் முறையாக விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
https://twitter.com/dhanushkraja/status/834038726871412737
இந்நிலையில் இந்த படத்திலும் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற புதிய தகவல் ஒன்று.வெளியாகியுள்ளது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.