விவாகரத்துக்கு பின் ஒன்றாக வந்த தனுஷ்-ஐஸ்வர்யா, எதுக்கு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
விவகாரத்திற்கு பின் தனுஷ்-ஐஸ்வர்யா சேர்ந்து வந்து இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபலமான ஜோடிகள் விவாகரத்து வாங்குவதை வழக்கமாக ஒன்றாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தனுஷ்- ஐஸ்வர்யாவும் ஒருவர். 18 ஆண்டு காலமாக சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து இருந்தவர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. ஐஸ்வர்யா-தனுஷின் இந்த முடிவு பலருக்கும் பேர் அதிர்ச்சியை தந்தது. இதை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள்.
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:
மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து இருந்தார்கள். ஆனால், எந்த பலனும் இல்லை. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தனுஷ் படங்களை இயக்குவது, நடிப்பது, தயாரிப்பது என்று பிசியாக இருக்கிறார்.
பிரிவுக்கு பின் தனுஷ்-ஐஸ்வர்யா:
அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதற்கிடையில் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே பரஸ்பரமாக விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்கள்.
விவாகரத்து:
இதை அடுத்து நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் இருவருமே கையெழுத்து போட்டு பரஸ்பரமாக பிரிந்தார்கள். இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்கள் இருவருமே பிரிந்து வாழ்ந்தாலும் தங்களுடைய மகன்களை எல்லா பட விழாக்களுக்கு அழைத்துச் செல்வதில் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விவாகரத்துக்கு பிறகு தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து சென்ற நிகழ்ச்சி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=8Ov-Bl3C6Dw
பட்டமளிப்பு விழா:
அதாவது, தங்களுடைய மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவுக்கு தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக வந்திருக்கிறார்கள். சென்னையில் உள்ள அமெரிக்கா இன்டர்நேஷனல் ஸ்கூலில் தான் தன்னுடைய பள்ளி படிப்பை யாத்ரா படித்து முடித்து இருக்கிறார். இந்தப் பள்ளியில் நடத்திய பட்டமளிப்பு விழாவில் தான் தனுஷ்-ஐஸ்வர்யா கலந்து கொண்டு தங்களுடைய மகனை கட்டி அணைத்து இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் இணையத்தில் வைலகி வருகிறது