மூத்த மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ், ஐஸ்வர்யா - விவாகரத்துக்கு பின் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.

By Rajkumar · 22/8/2022

மகன்களுக்காக தனுஷ்- ஐஸ்வர்யா மீண்டும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷ்- ஐஸ்வர்யாவின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள்.

மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

தனுஷ் நடித்த படங்கள்:

சமீபத்தில் தனுஷ் நடித்த தி கிரேட் மேன் என்ற படம் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இதனை ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை அடுத்து தனுஷ் அவர்கள் நானே வருவேன், வாத்தி, sir ஆகிய பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். பிறகு ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

விவாகரத்துக்குப் பின் தனுஷ்- ஐஸ்வர்யா :

இந்நிலையில் பிரிவிற்கு பின் தனுஷ்- ஐஸ்வர்யா மீண்டும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விவாகரத்துக்குப் பின் இருவரும் எந்த ஒரு இடத்திலும் சந்தித்து பேசிக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இருவரும் தங்களின் பழைய வீட்டில் ரகசியமாக சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா- தனுஷ் மீண்டும் ஒன்றாக சந்தித்து இருக்கிறார்கள்.

தனுஷ்- ஐஸ்வர்யா லேட்டஸ்ட் புகைப்படம்:

அதாவது, தனுஷ்- ஐஸ்வர்யாவின் மூத்தமகன் யாத்ரா. இவர் தனது பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவி ஏற்றிருக்கிறார். அதை காண தனுஷ்- ஐஸ்வர்யா சென்றிருக்கிறார்கள். பின் அங்கிருந்து அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் பிள்ளைகளுக்காக மீண்டும் இருவரும் இணைந்து விடுங்கள் என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full