தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் அடுத்த படத்தின் கதை இதுவா ? இன்னொரு பஞ்சாயத்த கூட்டிடுவாங்க போலவே.

By Rajkumar · 27/4/2021

கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் நேற்று (ஏப்ரல் 9) வெளியாகியது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

https://twitter.com/dhanushkraja/status/1385434826954600450

மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இணைந்துள்ளது மாரி செல்வராஜ் - தனுஷ் இணை.

https://twitter.com/mari_selvaraj/status/1385437783276232707

இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்துகொண்டு இருக்கும் நிலையில் கர்ணன் படத்தின் தொடர்ச்சியாக கர்ணன் 2 உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கர்ணன் படத்திற்கு ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வந்த நிலையில் தற்போது மீண்டும் கர்ணன் 2 என்றால் கண்டிப்பாக சமூகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full