இளையராஜா பயோபிக் படத்தின் இயக்குனர் மாற்றமா? உண்மை நிலவரம் இதுதான்

By subhashini · 10/2/2026

தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல இருக்கிறது. மேலும், இளையராஜாவின் 50 ஆண்டு திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருந்தது.

இதில் பாடகர்கள் பலர் பாடல்களை பாடி இருந்தார்கள். இதில் பலர் இளையராஜாவின் எவர் கீரின் பாடல்களும் பாடப்பட்டது. மேலும், இளையராஜாவின் பயோபிக் படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியாகி இருந்தது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். காரணம், தனுஷின் முகம் இளையராஜா முகம் போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷ், இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் பயோபிக்கில் நடிக்க தனுஷ் ஒத்து கொண்டார்.

இளையராஜா பயோபிக்:

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் உற்சாகமும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் இளையராஜாவுடன் நட்பாக பழகிய இயக்குனர்கள், பாடகர்கள் என பல பேர் இந்த படத்தில் வருவார்களா? கமலஹாசன், ரஜினி, வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெருமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. கனெக்ட் மீடியா, பிகே புரொடக்‌ஷன்ஸ், மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இளையராஜாவும் இந்த படத்தை தயாரிப்பதாக இருக்கிறது.

படம் பற்றிய சர்ச்சை:

சில மாதங்களுக்கு முன்புதான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ், அருண் மாதேஸ்வரன் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. ஆனால், அதற்கு பிறகு படம் பற்றி எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும், கடந்த சில தினங்களாகவே இந்த படத்தை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், படத்தின் இயக்குனர் மாற்றி விட்டதாகவும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

ரியாஸ் அகமது பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக தனுஷின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது அளித்த பேட்டியில், தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப் போவதில்லை என்று பரவும் செய்திகள் எதுவும் உண்மை கிடையாது. லோகேஷ் கனகராஜின் டிசி படத்தை முடித்த பிறகு திட்டமிட்டு படி இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கப்படும். படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகளும் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full