நயன்தாரா சொல்வது எல்லாம் பொய், ஆனால்- தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கொடுத்த பதில்
நயன்தாரா விவகாரம் குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் தனுஷ்- நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை.
விக்கி -நயன் திருமணம்:
மேலும், விக்கி -நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த திருமண நிகழ்வு வீடியோ நவம்பர் 18ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நிறுவனமே கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல்கள், காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக நானும் ரவுடி தான் படத்தினுடைய தயாரிப்பாளர் தனுஷ் இடம் அனுமதி கேட்டு 2 வருடங்களாக காத்து இருந்தார்கள். ஆனால், தனுஷ் அனுமதி தரவில்லை.
Letter Startingலேயே தனுஷ் S/o. கஸ்தூரி ராஜா & B/o. செல்வராகவன்லாம் போட்டு 😯#Nayanthara 👀 https://t.co/cpn7vhSxuz
— Prakash Mahadevan (@PrakashMahadev) November 16, 2024
தனுஷ் குறித்த சர்ச்சை:
இதை அடுத்து சமீபத்தில் இந்த ‘Beyond the Fairy Tale’ படத்தினுடைய ட்ரைலர் வெளியாகியிருந்தது. அதில் மூன்று வினாடி நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல் மற்றும் ஒரு காட்சி வந்திருக்கிறது. இதனால் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் தான் காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கின்றது. பின் இது தொடர்பாக நடிகை நயன்தாரா, தனுஷ் மீது குற்றம் சாட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர், என்னுடைய netflix ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணம் தெளிவாக புரிகிறது.
நயன் அறிக்கை:
இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களையும் ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் என்று கூறியிருந்தார். இதை அடுத்து நயன்தாரா- தனுஷ் விவகாரம் குறித்த செய்தி தான் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.
இயக்குனர் கஸ்தூரி ராஜா பேட்டி:
அதில் அவர், எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் பற்றி எங்களுக்கு கவலையே கிடையாது. எனக்கு தலைக்கு மேல நிறைய வேலை இருக்கிறது. என்னுடைய மகனுக்கும் அப்படித்தான். அவன் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் மற்றவர்களின் விமர்சனத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும். நடிகர் தனுஷிடம் என்.ஓ.சி வாங்குவதற்கு இரண்டு வருடம் காத்திருந்ததாக நயன்தாரா சொன்னதெல்லாம் பொய். இது குறித்து மேலும் நான் பேச விரும்பவில்லை. நானும் என் மகனும் இப்போது வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறோம் என்று கூறியிருக்கிறார்.