கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படும் ‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் - தனுஷ் செய்த உதவி

By subhashini · 12/8/2025

தன்னுடன் நடித்த சக நடிகருக்கு நடிகர் தனுஷ் செய்திருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் துள்ளுவதோ இளமை.

இந்த படத்தில் தனுஷ், ஷெரின் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பெரும்பாலும் இந்த படத்தில் இளம் நடிகர்கள் தான் நடித்து இருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தவர் தான் அபிநய். இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் உட்பட சில மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

அபிநய் திரைப்பயணம்:

இவர் ஜங்சன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் எல்லாம் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். ஆனால், அந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. அதன் பிறகு இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச்சோலை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தார்.

அபிநய் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர் தான் டப்பிங் பேசி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் டப்பிங் கொடுத்திருந்தார். இவர் படங்கள், விளம்பரங்கள் என்று நடித்திருந்தார். ஆனால், சில வருடங்களாகவே இவர் சினிமா பக்கமே காணோம். இவர் என்ன ஆனார்? என்றுமே தெரியவில்லை. சமீபத்தில் இவர் சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு தான் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

https://www.youtube.com/watch?app=desktop&v=xjgHJSel9MI

அபிநய் தற்போதைய நிலை:

அதற்கு காரணம், நடிகர் அபிநய், லிவர் சிரோசிஸ் என்ற கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய வயிற்றுப் பகுதியில் அளவுக்கு அதிகமாக வீங்கிருப்பதால் அவருக்கு டியூப் மூலமாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், பண உதவி கேட்டு அபிநய் வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

https://www.youtube.com/watch?v=uxu5rzIPxfI

தனுஷ் உதவி:

இதை அடுத்து அபிநய் மருத்துவ செலவிற்கு கேபிஒய் பாலா ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் செய்திருக்கும் உதவி தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது தனுஷ், 5 லட்சம் ரூபாய் மருத்துவ செலவுக்காக அபிநயிக்கு கொடுத்திருக்கிறார். தற்போது தனுஷின் இந்த செயலை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். தனுஷ்- அபிநய் இதுவருமே துள்ளுவதோ இளமை படத்தில் சேர்ந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full