தனுஷின் 'இட்லி கடை' படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? எவ்வளவுன்னு நீங்களே பாருங்க
தனுஷின் இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், பார்த்திபன், சமுத்திரகனி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இட்லி கடை படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, படம் வெளியாகி முதல் நாளிலேயே இந்திய அளவில் 10. 50 கோடி வசூலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 9. 75 கோடி வசூல் செய்துஇருக்கிறது.
இட்லி கடை படம்:
தெலுங்கில் 65 லட்சம் வசூலித்து இருக்கிறது. இனி விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் தனுஷின் தந்தை ராஜ்கிரன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து ஒரு கிராமத்தில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் காலையில் எழுந்து ராஜ்கிரண் கோயிலுக்கு சென்று ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மி கல்லில் சட்னி அரைத்து ஒரு சிறிய கூரை வீட்டில் தான் தன்னுடைய இட்லி கடையை நடத்தி வருகிறார்.
இட்லி கடை பட வசூல்:
அந்த ஊருடைய அடையாளமாகவே ராஜ்கிரன் இட்லி கடை தான் இருக்கிறது. அதோடு தனுஷ் குண்டு செட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது என்று நினைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்புகிறார். வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பெரிய நிறுவனராக சத்யராஜ் இருக்கிறார். அவருடைய நிறுவனத்தில் ஒரு பெரிய பொறுப்புக்கு தனுஷ் செல்கிறார். அதற்குப்பின் சத்யராஜின் மகளை தனுஷ் கல்யாணம் செய்ய நினைக்கிறார். சத்யராஜின் மகன் தான் அருண் விஜய்.
படத்தின் கதை:
அவருக்கு தன் தங்கையை தனுஷுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதில் விருப்பமே இல்லை. அப்போதுதான் தன்னுடைய தந்தை இறந்த செய்தி தனுஷுக்கு தெரிகிறது. அதைக் கேட்டவுடன் திரும்பவும் தனுஷ் தன்னுடைய சொந்த ஊருக்கே வருகிறார். தனுஷ், சத்யராஜின் மகளை திருமணம் செய்து கொண்டாரா? தன்னுடைய அப்பா நேசித்த இட்லி கடையை தனுஷ் எடுத்து நடத்தினாரா? தனுசுக்கும் அருண் விஜய்க்கும் இடையே என்ன பகை? என்பது தான் படத்தின் மீதி கதை.