குடும்ப பாசம், சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த படங்கள் அதிக அளவில் ரசிகர்களிடம் லைக்ஸ் குவிக்கும். அது எல்லா மொழி திரைப்படங்களுக்குமே பொருந்தும். 2003-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அம்மா நானா ஒ தமிழா அம்மாயி’. இதில் ஹீரோவாக ரவி தேஜா நடித்திருந்தார். அவருக்கு அம்மாவாக ஜெயசுதா நடித்திருந்தார். இப்படம் மெகா ஹிட்டானது. ஆகையால், இப்படம் தமிழ் (M.குமரன் S/0 மகாலக்ஷ்மி), கன்னடம் (மௌர்யா), ஒடியா (கத தீதிலி மா கு), போஜ்புரி (ஜிகர்வாலா) என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

ரீமேக் செய்யப்பட்ட படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில் தமிழில் வந்த ‘M.குமரன் S/0 மகாலக்ஷ்மி’ திரைப்படம் ரொம்பவே ஸ்பெஷல். காரணம்.. நடிகை நதியா தான். சில மலையாள படங்களில் நடித்த நதியா, தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படம் ‘பூவே பூச்சூடவா’.

Advertisement

இதனைத் தொடர்ந்து “மந்திர புன்னகை, சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன்” என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நதியா நடித்தார். அதன் பிறகு பல வருடங்கள் நதியா படங்களில் நடிக்காமல் இருந்தார். 2004-ஆம் ஆண்டு வந்த ‘M.குமரன் S/0 மகாலக்ஷ்மி’ படம் மூலமாக தான் மீண்டும் நடிகை நதியா ரீ-என்ட்ரியானார்.

இந்த படத்தில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். ‘ஜெயம்’ ரவியின் அம்மா கேரக்டரில் நதியாவும், அப்பா கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜும் நடித்திருந்தனர்.இந்த படத்தை பிரபல இயக்குநரும், ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா இயக்கியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் சில அரிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை இயக்குனர் ராஜா பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் தனுஷும் இருக்கிறார்.

Advertisement
Advertisement