படத்திற்கு இந்த டைட்டில் வைக்க இது தான் காரணம் - 'கர' பட இயக்குனர் சொன்ன தகவல்
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் இட்லி கடை
இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரன், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்த்து. மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் கலக்கி கொண்டு வருகிறார். தற்போது நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கர. இது தனுஷ் உடைய 54வது படம். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி இருக்கிறார்.
கர படம்:
இந்த படத்தில் மம்தாபைஜி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் 30-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தினுடைய டைட்டில் பற்றி நிறைய விமர்சனங்கள் கிண்டல்கள் வந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக படத்தின் இயக்குனர் அளித்த பேட்டியில், படத்துடன் டைட்டிலை அறிவித்த போது என்ன பெயர் கோபால். என்ன கோபால்னு கூப்பிடுவாங்கன்னு மீம்ஸ் எல்லாம் போட்டாங்க.
படத்தின் டைட்டில் சர்ச்சை:
நிறைய கிண்டல் கேலி எல்லாம் வந்தது. நிஜமாகவே எனக்கு தெரிந்தவர் ஒருவருடைய பெயர் கரசாமி. அவரை கர என்று தான் கூப்பிடுவாங்க. அதைக் கேட்கும் போதெல்லாம் கர என்று பெயர் இருக்கா என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுபோக கரசாமி என்று ஒரு குல தெய்வமும் இருக்கு. அதுபோலவே படத்தில் அவர் ஒரு நெகட்டிவ் ரோல். கர சொல்லும்போது அவன் கரப்படுஞ்சவன்னு சொல்லவும் நல்லா இருந்ததுன்னு படத்திற்கு டைட்டிலாக வைத்தேன் என்று கூறி இருக்கிறார்.