தனுஷின் 'கர' படம் பாக்ஸ் ஆபீசில் தட்டி தூக்கியதா? முதல் நாளே வசூல் எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கர. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மம்தா பைஜி, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், சுராஜ், கருணாஸ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கர படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தனுஷின் கர படம் வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் 5.75 கோடி வசூல் செய்திருக்கிறது. உலக அளவில் 9.14 கோடி வசூல் செய்திருக்கிறது.
கர படம்:
இனிவரும் நாட்களிலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஹீரோ தனுஷ் ஒரு திருடன். தனுஷ்- பிரித்திவி இரண்டு பேருமே சேர்ந்து இரண்டு எம்எல்ஏ வீட்டை திருட செல்கிறார்கள். அதில் தனுஷ் மட்டும் மாட்டிக் கொள்கிறார். அவர் மாட்டிக்கொண்ட போலீஸ் ஸ்டேஷனில் உயர் அதிகாரியாக சுராஜ் இருக்கிறார். சுராஜ், தனுஷின் மீது நிறைய கேசுகளை போடுகிறார். தனக்கு பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்று தான் இதெல்லாம் செய்கிறார். இதை அறிந்த தனுஷ், சுராஜை அடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து ரேணிகுண்டாவிற்கு செல்கிறார்.
https://www.youtube.com/watch?v=VVPXlxb8N_w
கர பட வசூல்:
அதற்கு பிறகு மம்தா உடன் சேர்ந்து தனுஷ் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஆனால், பண கஷ்டம் அவரை
விட்டு வைக்கவில்லை. இதனால் தனுஷ் மெஸ் ஒன்றை ஆரம்பிக்க நினைக்கிறார். இதனால் தனுஷ், தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து தன்னுடைய அப்பா ரவிக்குமாருடைய நிலத்தை விற்று பணத்தை
ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கிறார். சொந்த ஊருக்கு வந்த பிறகு தான் அவருடைய நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து தான் டிராக்டர் வாங்கி இருக்கிறார் என்பதை தனுஷ் தெரிந்து கொள்கிறார்.
படத்தின் கதை:
ஒரு கட்டத்தில் வாங்கிய கடனுக்காக நிலத்தை பேங்க் ஜப்தி செய்கிறது. ரவிக்குமாறும் இறந்து போகிறார். தன்னுடைய அப்பாவை தன்னுடைய நிலத்தில் அடக்கம் செய்ய வங்கி ஒத்து கொள்ளவில்லை. இப்படி எல்லா திசைகளிலுமே பிரச்சனை மேல் பிரச்சனை தனுசுக்கு வருகிறது. அதற்கு பிறகு தனுஷ் எடுக்கும் முடிவுகள் என்ன? பிரச்சனைகள் கடந்து தனுஷ் வந்தாரா? போலீஸ் இடம் மீண்டும் சிக்கினாரா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.