மாமன் கர்ணனை தேடி மலை உச்சி ஏறினால் திரௌபதை - பல சர்ச்சைகளை கடந்து வெளியான கர்ணன் பட பாடல்.

By Rajkumar · 11/3/2021

கர்ணன் படத்தின் மூன்றாம் பாடலில் 'திரௌபதி முத்தம்' என்று குறிப்பிட்டு வெளியான அறிவிப்பு அடுத்து, இதுகுறித்து திரௌபதி இயக்குனர் மோகன் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ்.கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. தற்போது ஜாகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிசியாக நடித்து வரும் தனுஷ், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார்.

https://twitter.com/GuruLeaks/status/1369254392973688834

இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் இசையமைத்து உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து 'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பாடலை தொடர்ந்து . 'ஏ ஆளு பண்டாரத்தி' என்று துவங்கும் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடலை தேவா பாடி இருந்தார். கண்டா வரச் சொல்லுங்க பாடலை போல இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கர்ணன் படத்தில் இருந்து மூன்றாவது பாடலுக்கான அறிவிப்பு நேற்று (மார்ச் 9) வெளியானது. இந்த பாடலுக்கு திரௌபதி முத்தம் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.

https://www.youtube.com/watch?v=rTj8xFGW2so&feature=youtu.be

இந்த பாடலின் அறிவிப்பு வெளியானதில் இருந்து பலரும் 'திரௌபதி' இயக்குனர் மோனை டேக் செய்து கேலி செய்து வருகின்றனர். திரௌபதி படம் வெளியான போது, அது தலித் மக்களை குறிப்பிட்டு தாக்கி எடுத்தது போல இருந்தது என்று பல சர்ச்சைகள் எழுந்தது. தற்போது 'திரௌபதி முத்தம்' என்ற தலைப்பில் கர்ணன் பாடல் வெளியாகி இருக்கிறது.

https://twitter.com/mohandreamer/status/1369510484295094273

அதிலும், மாமன் கர்ணனை தேடி மலை உச்சி ஏறினால் திரௌபதை. இனி எந்த நேரமும் மழை பெய்யலாமென்று நிம்மதியாக ஆற்றில் இறங்கினான் ஏமன் தாத்தா. மழைக்காக காத்துக் கொண்டிருந்த குதிரை சிறுவனின் சிரிப்பில் தொடங்கியது பாடலும் மழையும் என்று பாடலின் பாடலின் ஆரம்பத்தில் என்ற விளக்கத்துடன் துவங்கி இருக்கிறது இந்த பாடல்.

behindtalkies AMP · Quick view
View full