கமலின் தக் லைஃபை விட தனுஷின் 'குபேரா' படம் வசூலை குவித்ததா? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

By subhashini · 21/6/2025

தனுஷின் குபேரா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தனுஷின் நடிப்பும் இயக்குனர் உடைய வேலைப்பாட்டையும் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குபேரா படம்:

இந்த படம் நேற்று உலகம் முழுவதுமே பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. முதல் ஷோவே காலை 9 மணிக்கு தான் தொடங்கப்பட்டது. திரையரங்குகளில் ஆட்டம் பாட்டம் என்று ரசிகர்கள் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் இந்த படம் இந்தியாவில் 13.5 கோடி வசூல் செய்திருக்கிறது.

https://www.youtube.com/watch?v=jJE0KnGYm4E

குபேரா வசூல்:

தமிழ்நாட்டில் மட்டும் குபேரா படம் 3.5 கோடி வசூல் செய்திருக்கிறது. உலக அளவில் 17 கோடி வசூல் செய்து இருக்கிறது. பான் இந்தியா படத்திற்கு இந்த வசூல் கொஞ்சம் சுமார்தான் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான கமலின் தக் லைப் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மொத்தம் 10 கோடி வசூல் செய்தது. தக் லைஃபை காட்டிலும் குபேரா படம் கம்மியான வசூல் தான் செய்திருக்கிறது. இனி வரும் நாட்களில் குபேரா படம் வசூலிக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

படத்தின் கதை:

படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் நீரஜ் க்ளோபல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பல லட்சம் கோடி மதிப்பில் ஆன எண்ணைய் மற்றும் எரிவாயு ஒப்பந்தத்தை கைப்பற்ற திட்டம் போடுகிறார். பின் நீரஜ், இந்த திட்டத்தை தன்னுடைய பெயரிலோ, நிறுவனத்தின் மூலமோ செய்யக்கூடாது என்று நாகார்ஜுனாவை வைத்து செய்ய திட்டம் போடுகிறார். நாகர்ஜுனா முன்னாள் சிபிஐ
அதிகாரியாக இருந்தவர். இவர் சிறையில் இருக்கிறார்கள். நேர்மையாக இருந்துமே அரசாங்கம் தனக்கு குற்றவாளி பட்டம் சுமத்தியதால் அவருக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இதனால் இவர் நீரஜினுடைய திட்டத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

பின் நீரஜ் ஒரு லட்சம் கோடியில் 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும் மீதி வெள்ளை பணமாகவும் தர வேண்டும். இதில் எனக்கும் என்னுடைய நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். அதற்கு நாகர்ஜுனா இதை பினாமி மூலம் செய்கிறார். அதற்காக இவர் பிச்சைக்காரர்களை வைத்து பரிவர்த்தனை நடத்துகிறார். மேலும், பணம் கை மாறிய பிறகு அந்த பிச்சைக்காரர்களையும் கொன்று விடுகிறார்கள். அப்படி தான் இந்த இந்த பிரச்சினையில் தனுஷும் சிக்கிக் கொள்கிறார். ஊர் முழுவதுமே தனுஷை சல்லடை போட்டு தேடுகிறார்கள். இதற்கு இடையில் தனுஷ், ராஸ்மிகாவை சந்திக்கிறார். இறுதியில் தனுஷ் என்ன ஆனார்? கோடிக்கணக்கான பணம் கைமாற்றப்பட்டதா? ராஸ்மிகா நிலை என்ன? நாகார்ஜுனா என்ன செய்தார்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full