நயன்தாரா மீது மான நஷ்டஈடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கு, நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு- என்ன தெரியுமா?

By subhashini · 8/1/2025

நயன்தாரா- தனுஷ் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் வழங்கி இருக்கும் அதிரடி தீர்ப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாவே இணையத்தில் தனுஷ்-நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. விக்கி – நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள்.

நயன் – தனுஷ் சர்ச்சை :

மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பே இந்த வீடியோவின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதன் காரணமாக தனுஷ்- நயன்தாரா இடையே பெரிய சர்ச்சை வெடித்து இருந்தது. அதனால், நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று வெளியிட்டு இருந்தார்.

நயன்தாரா போஸ்ட் :

அதில், ‘என்னுடைய ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணம் தெளிவாக புரிகிறது. இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல் பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே , நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தும் தனுஷ் NOC தரவில்லை என்றும் நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார்.

தனுஷ் தொடர்ந்த வழக்கு :

அதை தொடர்ந்து, தனுஷின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதனால், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் அவர்கள் சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் தனுஷ், பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும், நானும் ரவுடிதான் பட காட்சியை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதற்குப்பின் நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்திய காட்சியை இந்த ஆவண படத்தில் இணைக்கவில்லை. எங்களுடைய சொந்த சேகரிப்பில் இருந்தே இந்த காட்சியை பயன்படுத்தியதாக கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=qYyG_M4T4JM

நீதிபதி தீர்ப்பு:

இது தொடர்பாக நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் Netflix நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதி நீதிபதி தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது நெட்பிலிக்ஸ் தரப்பில் இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதற்கு நீதிபதி, இந்த வழக்கை ஜனவரி 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இனி கால அவகாசம் கேட்கக்கூடாது. அன்றைய தினம் தான் இறுதி தீர்ப்பு என்று அதிரடியாக உத்தரவு போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கில் யார் பக்கம் தீர்ப்பு சாதகமாக வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full