இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசையை விரும்பாத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது.

இந்த நிலையில் இளையராஜாவின் பயோபிக் படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி எடுக்க இருக்கும் தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, பாலிவுட் திரை உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பால்கி. பால்கி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் சமிதாப். இந்த படத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடித்திருந்தார்கள். இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

Advertisement

பால்கி படத்தில் தனுஷ்:

அதில் அவர் கூறியிருந்தது, இளையராஜா பயோபிக்கை எடுக்கத்தான் முயற்சித்து வருகிறேன். அதை தனுஷை வைத்து எடுக்கலாம் என்று இருக்கிறேன். இது என்னுடைய கனவு படம். தனுஷின் முகம் இளையராஜாவின் முகம் போலவே இருப்பதால் தான் அவரை இந்த படத்தில் தேர்வு செய்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் பயோபிக்கில் நடிக்க தனுஷ் சரியாக இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

தனுஷ் திரைப்பயணம்:

மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கின்றன. நானே தயாரிக்கிறேன். எனக்கு இது கௌரவமான தயாரிப்பாக இருக்கும் என தனுஷ் சொல்லியிருக்கிறார். தன் வாழ்க்கை வரலாற்றை இளையராஜாவே தன் கைப்பட எழுதி வருகிறார். நெருங்கிய நண்பர்களிடம் அதன் சில சுவாரஸ்யமான பகுதிகளைப் படித்து காண்பிப்பதில் அவருக்கு பெரும் ஆர்வம் உண்டு. இது அவரை சந்திக்கும் அனைவருக்கும் கிடைக்கும் அனுபவமல்ல. தனுஷ், பால்கி மற்றும் அவருடைய சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.

Advertisement

தனுஷ் நடித்த படங்கள்:

தனுஷ் இறுதியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தனுஷ் அவர்கள் நானே வருவேன், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருந்த படம் வாத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

Advertisement

தனுஷ் 50 படம்:

இந்த படத்தில் தனுஷ் மற்ற படங்களை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தடி மற்றும் முடியை வளர்த்திருந்தார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக இவர் மொட்டை அடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கி நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement