என் மகன் யாத்ரா சினிமாவில் நடிக்க போறானா? நடிகர் தனுஷ் கொடுத்த நச் பதில்

By subhashini · 28/4/2026

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் இட்லி கடை.

இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரன், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்த்து. மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் கலக்கி கொண்டு வருகிறார். தற்போது நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கர. இது தனுஷ் உடைய 54வது படம். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி இருக்கிறார்.

கர படம்:

இந்த படத்தில் மம்தாபைஜி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் 30-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பிரமோஷன் நடைபெற்றிருக்கிறது. அப்போது விழாவில் பேசிய தனுஷ், இது நான் நடித்த படமோ, விக்னேஷ் ராஜா எடுத்த படமோ, தயாரிப்பாளரின் படமோ கிடையாது. இது மக்களாகிய உங்களுடைய படம். நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் படம் பார்க்கும்போதே உங்களுக்கே தெரியும்.

தனுஷ் பேட்டி:

மக்களுடைய பிரச்சனையை சரியான வழியில் சொல்லும் படம் தான் கர. இது முழுக்க முழுக்க மக்களுக்கான படம். ரிலீசுக்கு முன்பு நான் ரொம்ப நம்பிக்கையுடன் சில படங்களை பற்றி பேச மாட்டேன். இந்த படம் மீதும் எனக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கிறது. என்னை நம்பி தியேட்டருக்கு செல்லுங்கள். இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். குழந்தைகளை தவிர மற்ற அனைவருக்குமே தங்களை திரையில் பார்ப்பது போலவே இருக்கும். தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை கண்ணுக்கு தெரியும்.

மகன் பற்றி சொன்னது:

அந்த வலி புரியும், அதற்கான தீர்வும் தெரியும். அதை நீங்கள் கண்டிப்பாக எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்லலாம். அதேபோல் என்னுடைய மூத்த மகன் யாத்ரா சினிமாவிற்கு அறிமுகமாக போரானா? என்று பலருமே கேட்டிருந்தார்கள். சூழ்நிலை காரணமாக நான் 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். அவனுக்கு இப்போதுதான் 19 வயதாகிறது. இன்னமும் அவன் எனக்கு ஒரு குழந்தையாக தான் தெரிகிறான். அவன் என்னவாக போகிறான் என்று எனக்கு தெரியவில்லை. அவன் சினிமாவுக்கு வருவதைப் பற்றியும் எனக்கு தெரியாது. எல்லாம் அவனோட விருப்பம் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full