மகன்களை தனியாக விட்டு நடிகையை பாதுகாப்பாக கூட்டிக்கொண்டு ஓடிய தனுஷ் - வைரல் வீடியோ.

By Rajkumar · 18/8/2022

மகன்களை தியேட்டரிலேயே விட்டுவிட்டு நடிகையுடன் தனுஷ் ஓட்டம் பிடித்து இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது தனுஷ் அவர்கள் நானே நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

அதோடு மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடித்த தி கிரே மேன் என்ற படம் வெளியாகி இருந்தது. அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய படம் தான் தி கிரே மேன். பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி உள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=b0nlaBlcwYY

தி கிரே மேன் படம்:

கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னா டி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். நீண்ட நாள் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த படம் இன்று வெளியாக இருக்கிறது.

திருச்சிற்றம்பலம் படம்:

இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு தனுஷ் சென்னை ரோகிணி தியேட்டருக்கு இன்று காலை வந்திருக்கிறார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத், ஹீரோயினி ராசிகன்னா, மகன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்டோரும் படத்தை பார்த்து ரசித்தனர்.

https://www.youtube.com/watch?v=DP2FWZBOg2U

தனுஷை சூழ்ந்த ரசிகர்கள்:

மேலும், தனுஷ் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் தியேட்டரை சூழ்ந்து கொண்டனர். இதனை அறிந்த தனுஷ் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்பதற்காக படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே திரையரங்கை விட்டு வெளியே வந்து இருக்கிறார். அப்போது தனுஷையும், ராசி கண்ணாவையும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. பின் தனுஷ், ராசி கண்ணாவின் கையை பிடித்துக் கொண்டு வேகமாக படிக்கட்டில் இறங்கி தன்னுடைய காரை சென்று அடைந்து இருக்கிறார். அதற்கு பிறகுதான் தனுஷின் மகன்களும்,அனிருத்தும் உள்ளே இருப்பதை உணர்ந்து பவுன்சர்களின் உதவியோடு அவர்களையும் வெளியே கொண்டு வந்தார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full