அந்த நிலையில் இருந்து தான் நான் இங்கு வந்தேன் - 'குபேரா' பட விழாவில் நடிகர் தனுஷ் எமோஷனல்

By subhashini · 11/6/2025

குபேரா படத்தின் ப்ரோமோஷனில் தனுஷ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்தது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.

தனுஷ் திரைப்பயணம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், அருண் விஜய் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள். இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்கள். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.

குபேரா படம்:

இந்த படத்தில் தனுசு உடன் நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, சயாஜி ஷிண்டே உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சோசியல் திரில்லர் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தான் தயாரித்திருக்கிறது. இந்த படம் இந்த மாதம் 20ஆம் தேதி வெளியாக இருப்பதால் படக்குழுவினர் மும்முரமாக ப்ரமோஷன் பணிகளை செய்து வருகிறார்கள்.

https://www.youtube.com/shorts/gxS3ajDMAJQ

விழாவில் தனுஷ் சொன்னது:

இந்த நிலையில் இந்த படத்தினுடைய மூன்றாவது பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்று இருந்தது. அதில் கலந்து கொண்ட தனுஷ், எனக்கு இந்தி தெரியாது. நான் இங்கிலீஷ் தான் பேசுவேன். அதுவும் கொஞ்சம் தான் தெரியும். குபேரா ரொம்ப வித்தியாசமான படம். இது ஒரு மற்றொரு திரைப்படம் என்று கடந்து போய்விட முடியாது. இது எங்களுக்கு ஸ்பெஷலான படம். என்னுடன் இருப்பவர்களும் அதை ஒப்புக்கொள்வார்கள். இந்த படத்தின் உடைய படப்பிடிப்பு எங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது. அதேபோல் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குப்பையை கொட்டும் இடங்களிலும், குப்பை வண்டிகளிலும் இந்த படத்தினுடைய படப்பிடிப்பை நடத்தினோம். ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

பட அனுபவம்:

இது ப்ரொமோட் செய்யப்பட வேண்டும். நான் இந்த படத்தில் பிச்சை எடுப்பவராக நடித்திருக்கிறேன்.
நான் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சேகர் சார் சொன்னதை அப்படியே செய்தேன். அந்த கதாபாத்திரத்தின் வாழ்க்கையை எனக்கு சுலபமாக கற்றுக் கொடுத்தார். நான் இதுவரை செய்த கதாபாத்திரங்களிலேயே இது ரொம்ப வித்தியாசமானது. இந்த சவாலையும் நான் என்ஜாய் பண்ணி செய்தேன். சேகர் சார் அற்புதமான மனிதர். அவரைப்போல ஒருத்தரை நீங்கள் பார்க்கவே முடியாது. அதற்காகவே நான் இந்த படத்தை செய்தேன். இந்த படத்தின் ஒரு காட்சியில் குப்பை கிடங்கில் தான் நடித்தோம். கிட்டத்தட்ட 7 மணி நேரம் அங்கு படபிடிப்பு நடந்தது. அந்த மாதிரியான காட்சியில் சில நேரம் மாஸ்க் அணிந்திருப்போம். சில நேரங்களில் அணிய மாட்டோம். அது பிரச்சனை இல்லை. ஆனால், இந்த படத்தின் மூலம் இன்னொரு வாழ்க்கையை பார்க்க முடிந்தது. நான் அந்த மாதிரியான நிலையில் இருந்து தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். இப்பொழுது கடவுளின் அருளால் இங்கு நிற்கிறேன். மீண்டும் என்னுடைய குழந்தை பருவத்திற்கு இப்படம் அழைத்து சென்றது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full