தனது கணவரை நடிகர் ஆக்கியதற்காக, நன்றி தெரிவித்து தனுஷின் சகோதரி கார்த்திகா தேவி போட்ட எமோஷனல் பதிவு
தனது கணவரை நடிகர் ஆக்கியதற்காக தனுஷுக்கு அவர் சகோதரி நன்றி கூறி இருக்கும் செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் 'ராயன்' பட செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் மிகப் பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். சமீபத்தில் தனுஷ் 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். இது தனுஷின் 50வது படமாகும்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மேலும், இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனை படைத்து வருகிறது.
தனுஷின் மாமா:
இதனைத் தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுடன் இணைந்து ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன். இவர் வேறு யாரும் இல்லை தனுஷின் சகோதரி டாக்டர் கார்த்திகா தேவியின் கணவராகும். இந்நிலையில் பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவரான இவரை ஒரு நடிகராக மாற்றிய தனது சகோதரர் தனுஷிற்கு நன்றி தெரிவித்து கார்த்திகா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கார்த்திகா தேவியின் பதிவு:
அதில், என்னிடம் இருந்த இந்த புகைப்படங்களை வெளியிட்டு என்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள ஒரு வருடமாக நான் காத்திருந்தேன். ஒரு இதய சிகிச்சை மருத்துவராக எனது கணவர் டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயாவின் திறமைகள் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால், அவருக்குள் இருக்கும் ஒரு நடிகரை தனுஷ் எப்படி கண்டுபிடித்தார் என்பதும், பின் அவரை தனது ஐம்பதாவது படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
தம்பிக்கு நன்றி சொன்ன அக்கா:
மேலும், தனுஷ் மற்ற நடிகர்களை படப்பிடிப்பு தளங்களில் வேலை வாங்குவதை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அதேபோல் எனது கணவரையும் ஒரு நடிகராக மாற்றி இருப்பதை பார்த்து நான் வியந்து விட்டேன். மேலும், ராயன் படத்தில் எனது கணவர் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவரது ஐம்பதாவது திரைப்படத்தில் எனது கணவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை.
தனுஷ் குறித்து :
இன்று நான் ஒரு மகிழ்ச்சியான சகோதரியாகவும், மகிழ்ச்சியான மனைவியாகவும் உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே தனுஷ் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ், 'குபேரா' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து நாகர்ஜுனா மற்றும் ரஷ்மிகா நந்தனா நடிக்க உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.