அப்பா நடிப்புல கெட்டின்னா, மகன் படிப்புல கெட்டி- தனுஷ் மகனின் +2 மார்க் எவ்ளோ தெரியுமா?

By subhashini · 7/5/2024

நடிகர் தனுஷ் மகன் யாத்ரா 12 ஆம் வகுப்பில் எடுத்திருக்கும் மதிப்பெண் குறித்த பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 18 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து இருந்தவர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் வாழ்க்கையில் பிரிவதாக வெளிவந்த தகவல் தான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஐஸ்வர்யா- தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும், பல முயற்சிகள் செய்து வருகிறார்கள். அப்படி இருந்தும் ஒரு பலனும் இல்லை. மேலும், ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் பிரிந்து இருந்தாலும் , முறையாக அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:

அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு, இருவரும் தங்களின் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் "தி கிரேட் மேன்" என்ற ஹாலிவுட் திரைப்படம், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் "கேப்டன் மில்லர்".

பிரிவிற்கு பின் தனுஷ்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத்தொடர்ந்து தனுஷ் சில படங்களில் கமிட் ஆகியும் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் அவர்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து "லால்" என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

பன்னிரண்டாம் வகுப்பு:

இந்த நிலையில் தனுஷ் மகன் பன்னிரண்டாம் வகுப்பில் எடுத்து இருக்கும் மதிப்பெண் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் 12 ஆம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் அந்த வகையில் தனுஷின் மகன் யாத்ராவும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருக்கிறார். அதில் 600க்கு 569 மதிப்பெண் பெற்று இருக்கிறது.

தனுஷ் மகன் மதிப்பெண்:

தமிழ் - 98

ஆங்கிலம் - 92

கணிதம்- 99

இயற்பியலில் - 91

வேதியலில்- 92

பயாலஜி- 97

Tamil Behind Talkies AMP · Quick view
View full