'இட்லி கடை' பெயர் வைக்கக் காரணம் இது தான் - பட விழாவில் நடிகர் தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்

By subhashini · 15/9/2025

இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் தனுஷ் தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குபேரா படம் நல்ல வசூலை செய்தது. தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரன், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

தனுஷ் திரைப்பயணம்:

இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. அப்போது விழாவில் பேசிய தனுஷ், இட்லி கடை என்ன டைட்டில்? இன்னும் பவர்ஃபுல்லா வைத்திருக்கலாமே என்றெல்லாம் சொன்னார்கள். சில படங்களில் படத்தினுடைய ஹீரோ பெயரையே டைட்டிலாக வைப்பார்கள். இந்த படத்தினுடைய ஹீரோவே அந்த இட்லி கடை தான். அதனால்தான் அந்த டைட்டில் வைத்தோம். ஒரு முறை நான் ஒரு மீட்டிங்காக வெளிநாடு சென்றிருந்தேன்.

விழாவில் தனுஷ்:

நான் தனியாக இருந்தால் எனக்கு துணை இளையராஜா சார் பாட்டு தான். ஒரு சில பாடல்கல் நம் வாழ்க்கையினுடைய ஏதோ ஒரு ஞாபகத்தை கொடுக்கும் சக்தி இருக்கும். இந்த ஏரிக்கரை பாடல் என்னை சின்ன வயதில் விடுமுறைக்கு சென்ற என் அம்மாவின் கிராமத்துக்கும் அங்கிருந்த பாட்டி வீட்டுக்கும் கூட்டிட்டு போனது. அந்த கிராமத்தில் இரண்டு பஸ்தான் போகும். அங்கு ஒரே ஒரு இட்லி கடை தான் இருக்கும். அதில் சாப்பிட ஆசையா இருக்கும். ஆனால், காசு இருக்காது. காலையில் வயலில் பூப்பறிக்க சொல்லுவார்கள். எவ்வளவு பறிக்கிறோமோ அதுக்கு தகுந்த கூலி. நான் என் அக்கா, கசின்ஸ் எல்லோருமே காலையில் பூப்பறிக்க போவோம். 2.30 மணி நேரம் பறித்தாலுமே ஆளுக்கு ரெண்டு ரூபா கிடைக்கும்.

https://www.youtube.com/watch?v=lXx7ncGwsFM

சிறுவயது அனுபவம்:

அதை வைத்துக் கொண்டு அங்கிருக்கிற பம்பு செட்டில் குளித்துவிட்டு துண்ட மட்டும் கட்டிக்கொண்டு ரோட்டில் தக் லைப்பா நடந்து வருவோம். அந்த கடையில் எங்ககிட்ட இருக்கிற காசுக்கு 4,5 இட்லி வரும். உழைத்த காசில் சாப்பிடுற அந்த நிம்மதியும் சந்தோஷமும் நான் இதுவரை சாப்பிட்ட பெரிய பெரிய ரெஸ்டாரண்டில் கூட கிடைக்கவில்லை. இந்த பாட்டு என்னை அந்த இட்லி கடைக்கு கூட்டிட்டு போகும் போது தான் இந்த இட்லி கடை வைத்து ஒரு படம் எடுக்கணும் என்று எனக்கு தோன்றியது.
அந்த கடை மட்டும் இல்ல அந்த கிராமத்தில் என் மனதை கவர்ந்த என்னை பாதித்த கதாபாத்திரங்களும், சென்னையில் என்னை பாதித்த உண்மை கதாபாத்திரங்களை வைத்து செய்த ஒரு கற்பனை ஆன கதை தான் இந்த இட்லி கடை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full